எதிர்ப்பு மாநில முதல்வர்கள் பேசப்படுவதற்கு வழங்கப்படும் நேரம் மிக குறைவு. இவ்வாறு குரல்வளையை நெறித்து, கேவலப்படுத்துவது ஏன்? இதற்கு எங்களை அழைக்காமல் இருக்க வேண்டியது தானே?
எங்களை இந்த அளவு குறைந்த நேரம் கொடுக்கப்படுவது அர்த்தமற்றது, நான் என்னவெல்லாம் பேச வேண்டும் என் நினைத்திருந்தேனோ அதனை பேசி முடிப்பதற்குள், அதவாது 3 ல் ஒரு பங்கு தான் பேசினேன். மணி அடித்து நிறுத்தச்சொல்லி கேவலப்படுத்தி விட்டார்கள்.
மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் 30 முதல் 35 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் எனது பேச்சை முடித்துக்கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அவமானம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். பல மாநாடுகளில் பேசியிருக்கிறேன். இது போன்று நடந்ததில்லை.
குறிப்பாக 10 நிமிடத்தில் தமிழகத்தின் தேவையை எடுத்து வைக்க முடியாது, இது பயனற்றது. தெரிவித்தார். நான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளேன். இவ்வாறு ஜெ., கூறினார்.
தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் தமிழக முதல்வரை அவமானப்படுத்தியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேசிய கருணாநிதி இதனையை தெரிவித்தார். அப்போது, தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்வர் ஜெயலலிதா, தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறியுள்ளாரே? என்ற செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டதற்கு 'அவமானப்படுத்தி இருந்தால் கண்டிக்கத்தக்கது' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நடந்தது என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தான் பலமுறை தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளதாகவும் அப்போது, கூட்டங்களில் பங்கேற்கும் முதல்வர்கள், தங்கள் உரை அடங்கிய புத்தகத்தை கவுன்சிலில் முன்னதாக கொடுத்து விடுவார்கள் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும் முதல்வர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் வாசிக்கும் வரை வாசிப்பார்கள் என்று கூறிய கருணாநிதி மீதமுள்ள கருத்துகள் அந்த முதல்வரால் வாசிக்கப்பட்டதாக பதிவு செய்யப்படும் என்று விளக்கம் அளித்தார்.
தான் 5 முறை முதல்வராக இருந்தபோதும் இந்த நடைமுறைகள்தான் கடைபிடிக்கப்பட்டது என்று கூறிய அவர் இன்று நடந்த கூட்டத்தில், ‘பெல் அடித்தாலும் தொடர்ந்து 10 நிமிடம் பேசலாம்' என்று கூறினார். இது போன்று சம்பவம் தனக்கும் நிகழ்ந்துள்ளதாக கூறிய கருணாநிதி அந்த சூழ்நிலையில் பெல் அடித்தாலும் தொடர்ந்து நான் பேசியிருக்கிறேன் என்று கூறினார்.
//நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
ReplyDeleteகருத்தெல்லாம் சொல்றீங்க..//
சே சே அதெல்லாம் கெடையாது.
இது கொஞ்ச நாளைக்கு அரசியல் பண்ண உதவும்
ReplyDeleteபார்ப்போம்,ரசிப்போம்
நடுவண் அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை?!
ReplyDeleteஇதெல்லாம் அஈசியல்ல சகஜம்தானே
ReplyDeleteஎதிர்க்கட்சி முதல்வர்களுக்கு மைய அரசு ஆதரவு இருக்காது.
ReplyDeleteதமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு இந்த அவமானமெல்லாம் மிகச் சாதாரணம்!! நாங்க எவ்வளவோ அடிப்பட்டுட்டோம்,
ReplyDelete10 நிமிடம்தான் அனுமதி என்றால அதற்கு கூட்டத்தைக் கூட்டாமல், அறிக்கையினை மட்டும் அஞ்சல் வழி பெற்றிருக்கலாமே.
ReplyDeleteதமிழக முதல்வர் சென்றது இந்திய தலைநகரத்துக்கல்லவா,அது அயல் நாட்டு தலைநகரமா இல்லையா? அங்கு எப்படி, அதுவும் உறவு பிணக்கான சூழலில் கௌரவத்தை எதிர்பார்க்கலாம்?
ReplyDelete