கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 December, 2012

நாவடக்கம் யாருக்கு தேவை..? எதிர்கட்சி தலைவர் கேள்வி..?


அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது ஒருமுறை எதிர்கட்சி தலைவராக இருந்த கே.விநாயகம் தமிழக அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும்

யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு

-என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா எழுப்பினார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும்.  அந்தக் குறள் பேருந்து பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொது மக்களின் மனம் வருத்தப்படும்.

எனவே எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படி பதில் சொல்லப்போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.

அண்ணாவின் பதிலைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எல்லோரும் ஒரு சேர ஆர்பரித்து கைதட்டி மகிழ்ந்தார்கள்.

6 comments:

 1. அண்ணா அவர்களின் திறமை அவரது பதிலில் வெளிப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
 2. நாவடக்கம் நாம் எல்லோருக்குமே தேவை சிலருக்கு மேடையில்,பலருக்கு வயிற்றுக்காக

  ReplyDelete
 3. நாவை ஒன்றைமட்டுமே நம்பி அரசியல் செய்தவர் அல்லவா ,அவர் அப்படித்தான் சொல்லுவார்.

  ReplyDelete
 4. அறிஞர்கள் அறிஞர்கள்தான்! சந்தேகமில்லை! அருமையான பதிவு!

  ReplyDelete
 5. அருமையான பதில் - அறிஞர் அண்ணாவின் அழகான பதில் - உண்மையில் குறளாசான் நா உள்ள அனைவருக்குமாகத் தான் அக்குறளை எழுதினார். நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...