இந்த உலகில் உண்மையான சொர்க்கமமும் நரகமும் வெளியில் எங்கும் இல்லை, அவரவர் குடும்பத்தில்தான் இருக்கிறது, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சென்னை ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் சிறப்புரையாற்றிய ரஜினி, ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகையில் ஒரு குட்டிக் கதையை குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், “நண்பர்களே… இந்த உலகத்தில் யார் ஒருத்தன் வீட்டை, பெற்றோரை நல்லா வச்சிருக்கானோ அவன் சொர்க்கத்துல இருக்கான்னு அர்த்தம்.
எமலோகத்தில், எது சொர்க்கம் எது நரகம்னு ஒரு பேச்சு வந்தப்போ, எமன் சொன்னாராம், பூலோகத்துல போய்ப் பாருங்க, உங்களுக்கே தெரியும்னு சொல்லி தன்னோட அஸிஸ்டன்ஸை (கிங்கரர்கள்) அனுப்பி வச்சாராம்.
அவங்களும் பூமிக்கு வந்தாங்களாம். ஒரு வீட்டுக்குப் போயிருக்காங்க. அங்க பார்த்தா வீடே நிம்மதி இல்லாம இருக்கு. பிள்ளைங்க திட்டிக்கிறாங்க. அந்த அப்பா அம்மாவை திட்டறாங்க. ஒரே சண்டை, சச்சரவு… குடும்பத்தினர் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்களாம். கிங்கரர்களால் ஒரு செகன்ட் கூட இருக்க முடியல. இதான் நரகம்னு காட்டினாங்களாம். அடுத்து இன்னொரு வீட்டுக்குப் போய் பார்த்திருக்காங்க.
அங்கே பெத்தவங்களுக்கு அவ்வளவு மரியாதை. குடும்பமே அன்போட, பண்போட நடந்துக்கறாங்க. இதான் சொர்க்கம்னு சொன்னாராம் எமன்.
ஆக, நரகமோ சொர்க்கமோ… அது நம் வீட்டை நாம் வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. எனவே குடும்பத்தைக் கவனியுங்கள்.
அதனால்தான் என் பிறந்த நாளை ஒவ்வொரு ரசிகரும் தன் தாய் தந்தையரை விழுந்து வணங்கி கும்பிட்டு கொண்டாடினால் மகிழ்வேன் என்றேன்,” என்றார்.

உண்மையான கருத்து .. பெத்தவன்க்களுக்கு அப்புறம் தான் மத்தவங்க ...
ReplyDeleteஅழகான விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete