சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் நாளைக்
கொண்டாப்படுகிறது. இதுவரை இவர் கொண்டாடிய பிறந்தநாளை விட, இந்த வருடம்
சற்று ஸ்பெஷலானது என்று சொல்லலாம். ஏனெனில் இந்த வருடம் 12 தேதி, 12 மாதம்,
12 வருடம் (12-12-12) என்று அனைத்துமே பன்னிரெண்டாக இருப்பதே ஆகும்.
அதிலும் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால்,
சொல்லவே முடியாது. அந்த அளவில் இவருக்கு ரசிகர்கள் உலகம் முழுவதும்
இருக்கின்றனர். இவர் ஆரம்பத்தில் என்ன தான் ஒரு பேருந்து நடத்துநராக
இருந்தாலும், தனது உழைப்பால், மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளார்.
அத்தகையவர்
எப்படி இந்த சினிமா உலகில் பிரபலமானார் என்று பார்த்தால், அது அவரது
ஸ்டைல் தான். இவர் கருப்பாக இருந்தாலும், தனது அழகான ஸ்டைலால் மக்கள்
மனதில் அழியா இடம் பெற்றுள்ளார். சொல்லப்போனால், ஆரம்பத்தில் இளமையாக
காட்சியளிப்பதை விட, இப்போது தான் மிகுந்த இளமையுடன் காணப்படுகிறார் என்று
சொல்லலாம். மேலும் இவர் போட்ட வேடங்களில், மக்கள் மனதில் அழியா இடம்
பெற்றுள்ள ஸ்டைல்கள் என்று சில இருக்கின்றன. இப்போது அந்த மாதிரியான
ஸ்டைல்களில் சிலவற்றைப் பார்ப்போமா!!!
முதல் ஸ்டைல்
இவரது முதல் படம் அபூர்வ ராகம் படம். இதில் இவர் எந்த ஒரு மேக்-கப், ஸ்டைல் என்று எதுவும் இல்லாமல், லேசான தாடியுடன், பரட்டை தலையோடு கோட் சூட் போட்டு, வித்தியாசமாக தனது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
போலீஸ் ஸ்டைல்
அலெக்ஸ்பாண்டியன் என்ற பெயரில் மூன்று முகம் படத்தில் போலீஸ் வேடத்தில் பெரிய மீசை, சற்று நீளமான கிர்தா மற்றும் முரட்டுப் பார்வை என்று கம்ரீத்துடன் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று அசத்திக் காட்டி, மக்கள் மனதில் பதிந்துள்ளார்.
ரவுடி பார்வை
அதே மூன்று முகம் படத்தில் தனது இன்னொரு வேடத்தில் ஒரு ரவுடி போன்று, சுருட்டை முடியுடன், ஸ்லீவ்லஸ் சட்டையை அணிந்துக் கொண்டு, சூப்பரான நடிப்பை ரஜினிகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.
ராயல் லுக்
எவ்வளவு தான் ரஜினி கருப்பாக இருந்தாலும், பாட்ஷா படத்தில் சரியான ராயல் லுக்கான, கருப்பு நிற கோட் சூட் அணிந்து, கருப்பு நிற கூலிங் கிளாஸ் போட்டு, தாடி வைத்துக் கொண்டு, கம்பீரமாக நடித்துள்ளார்.
குர்தா பைஜாமா
ரஜினி அவர்களின் விருப்பமான உடை குர்தா பைஜாமா என்று சொல்லலாம். ஏனெனில் எப்போதும் அவர் சாதாரணமாக கூட அந்த உடையைத் தான் அணிவார். அதனால் தான் என்னவோ, அவர் தனது சூப்பர் ஹிட் படமான படையப்பாவில், வெள்ளை நிற குர்தா பைஜாமாவுடன் ப்ரௌன் நிற ஷாலை போட்டு, அழகான ஒரு தோற்றத்தோடு காட்சியளித்துள்ளார்.
போக்கிரித்தனமான உடை
நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளிவந்த பாபா படத்தில், சரியான ஒரு போக்கிரித்தனமான ஒரு உடையில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் தலையில் தலைப்பாகையை அணிந்து கொண்டு, கழுத்தில் பாபாவின் டாலரைப் போட்டுக் கொண்டு, வாயில் சிகரெட்டை வைத்தப் படி, முழுவதும் வித்தியாசமாக நடித்துள்ளார்.
யூத் லுக்
சந்திரமுகி படத்தில் மிகவும் இளமையாக ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கோட் உடன், ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து, அழகான சிரிப்போடு, யூத் லுக்கில் காணப்படுகிறார்.
ஸ்டைலோ... ஸ்டைல்
என்ன தான் ரஜினி கருப்பாக இருந்தாலும், வெள்ளைக் நிற கோட், வெள்ளைக் காரன் மாதிரியான தலைக்கு வெள்ளை முடி விக் மற்றும் ஒரு கூலிங் கிளாஸ் போட்டு, ஒரு போஸ் கொடுக்கும் போது, அதில் அதிக மேக்கப் இருந்தாலும், ஒரு தனி அழகோடு, ஒரு ஸ்டைலும் இருக்கிறது.
மாவீரன் சிவாஜி
சிவாஜி படத்தில் நடித்து, அந்த படத்தின் ஒரு பாடலில் மாவீரன் சிவாஜி போல் வேடம் போட்டு, ஸ்டைலாக நிற்கும் போது, அதன் அழகே தனி தான்.
பார்மல் லுக்
எந்திரன் படத்தில் ரோபோவாக நடிக்கும் போது, மீசையின்றி, சாதாரண ஹே ஸ்டைலில், கூலிங் கிளாஸ் அணிந்து, கோட் சூட் போட்டு, பார்ப்பதற்கு இளமையாகவும், ஃபார்மல் லுக்கிலும் அழகாக நடித்துள்ளார்.
சூப்பர் வில்லன்
எவ்வளவு வயதானாலும், துடிப்பான வில்லனாக எந்திரன் படத்தில் அழகான, ஸ்டைலான மேக்-கப்பில் சூப்பராக காணப்படுகிறார். அதிலும் 'Z' வடிவ கிர்தாவை வைத்துக் கொண்டு, முடியை நேராக முள் போன்று நீட்டிக் கொண்டு, தலையின் நடுவே வெள்ளை நிறத்தை அடித்துக் கொண்டு, சரியான வில்லன் போன்று கச்சிதமாகக் காணப்படுகிறார்.
மொட்டை பாஸ்
இறுதியில் இதுவரை போடாத ஒரு வேடத்தை, சிவாஜி படத்தில் போட்டு அனைவரது மனதிலும் மொட்டை பாஸ் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அதிலும் அந்த மொட்டையின் ஸ்பெஷல் என்னவென்றால், தலைக்கு மொட்டை அடிப்பதோடு, கிர்தா மற்றும் பிரென்ச் கட் என்ற ஒரு ஸ்டைலான தாடியையும் வைத்துக் கொண்டு, காதுகளில் கம்மல் போட்டு, டீசண்ட் லுக்கில் வித்தியாசமாக நடித்துள்ளார். (தொகுப்பு : தட்ஸ் தமிழ்)
ஸ்டைல் மன்னன் தொகுப்பு நல்லா இருக்கு.
ReplyDeleteHAPPY BIRTH DAY THALAIVAAAAAAAAAAAAAAAAaa
ReplyDeleteநல்லதொரு தொகுப்பு! நன்றி!
ReplyDelete