கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 December, 2012

கலைஞரின் அடையாளம் மஞ்சள் துண்டு மட்டும்தானா..?


“தங்களின் அடையாளமாக, சிலர் தாடி, தொப்பி, கையில் பிரம்பு வைத்திருப்பது போல, நான் மஞ்சள் துண்டு அணிந்துள்ளேன்' என்று, அண்மையில், கருணாநிதி கூறியிருப்பது, சிரிப்பை வரவழைக்கிறது. 


கலைஞர் அவர்களுக்கு அடுக்கடுக்கான அடையாளங்கள் பல இருந்தாலும், தமிழகத்தில், தற்போது அவருடைய அடையாளங்களில் முதன்மையானதாக திகழ்வது வரலாறு காணாத குடும்ப அரசியலை வளர்த்தெடுத்தவர் என்ற, ஒரே ஒரு அடையாளம் மட்டுமே. 

அதுவரை அவருடைய அரசியல் வாரிசுகளான வடதமிழகத்துக்கு மு.க.ஸ்டாலினும், தென்தமிழகத்துக்கு மு.க.அழகிரியும் நடத்திவந்த அனைத்துவிதமான அரசியலையும் தற்போது அவரது மகன்களும் துவங்கிவிட்டனர். கலைஞர் தன்னுடைய அரசியல் ராஜதந்திரத்தை மற்றும் அரசியலில் எப்படி சம்பாதிப்பது என்ற யுக்தியை தற்போது அவரது பேரர்களும் செம்மையாக கற்றுக்கொண்டு விட்டார்கள். கிரானைட் மோசடி வழக்கில் துரை தயாநிதி சிக்கியிருப்பது அனைவரும் அறிந்ததே.

இதுபோக கலைஞர் அவர்களுக்கு என்னற்ற அடையாளங்கள் இங்கு ஏகப்பட்டது இருக்கிறது. குறுகிய நேர உண்ணாவிரதமும், கறுப்புத் துண்டுக்கு மாறி, அதையும் குறுகிய நேரத்தில் தூக்கி எறிந்த காமெடியும் இவரை அடையாளப்படுத்தவில்லையா என்ன? 

"நெஞ்சுக்கு நீதி' சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். திருக்குறளுக்கு, "குறளோவியம்' எனும் தலைப்பில், உரை எழுதியது கூடவா, இவரை அடையாளப்படுத்தவில்லை? குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதினர். அவர்களெல்லாம் என்ன ஆகினர்? ஆனால் கருணாநிதியோ, உரை எழுதியதோடு ஓய்ந்து விடவில்லை; "கோடி' என்ற சொல்,  குறளில் ஏழு இடங்களில் மட்டுமே இடம் பெற்றிருப்பதைக் கண்டறிந்து, அதை, அப்படியே தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஏழு தலைமுறைக்கும், கோடிகளைக் குவித்து விட்ட சாதனை என்ன சாதாரணமானதா?

ஏதோ ஒரு செயலை தொடர்ந்து செய்தால் அதுவே ஆத்திகம். மதங்களும் சடங்குகளும் அப்படி உருவானதுதான்.  தொடர்ச்சியாக மஞ்சள் துண்டை பயன்படுத்துவது எப்படி நாத்தீகம் ஆகும் என்று எனக்கு தெரியவில்லை.


கலைஞர் அவர்களே தங்களுக்கு உண்மையான அடையாளம் வேண்டுமா..? மஞ்சள் துண்டோடு தங்களுடைய நாடகத்த‌னம் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு. மத்திய அரசிடம் சொல்லி மின் பற்றாக்குறையை போக்குங்கள்... காவிரி பிரச்சனையை தீர்த்து வையுங்கள்... அன்னிய முதலீட்டில் நடுநிலையாக இருங்கள்... குவித்த சொத்துக்களை நாட்டுக்கு அர்பணியுங்கள்.... ஈழத்தமிழ்களுக்கு ஒரு நாள் உண்மையாக போராடுங்கள்.... அப்போது கிடைக்கும் உங்களுக்கு அடையாளம்...

12 comments:

  1. என்ன சொல்ல எல்லாமே நாடகம்தான், இப்போது பொறுப்புகள் இல்லாததால் தினமும் ஒரு நாடக அரங்கேற்றம் நடக்கிறது என்றே சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க... கலைஞர் ஓய்வு அறிவித்துவிட்டு நிம்மதியாக இருந்தால் கூட நல்லதுதான்...

      Delete
  2. கலைஞ்ர் கருணாநிதி பதவியில் இருந்தாலும் இல்லையானாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவரை சுற்றியே அரசியல் நடக்கிறது.வெளியிலும் வலையிலும் அவரை தூற்றவும் போற்றவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.தினம் தோறும் தலைப்பு செய்தியாகவே இருக்கிறார்.அதே நேரம் மம்மியை தூற்றினால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் அறிந்து அதற்க்கேற்றார் போல் எழுதுகிறார்கள் நீங்கள் உள்பட

    ReplyDelete
  3. நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்! ஆனால் இதையெல்லாம் செய்து விட்டால் அவர் கலைஞர் அல்ல!

    ReplyDelete
  4. கலைஞர்: இன்னுமா உலகம் நம்பள நம்புது.
    வாரிசுகள்: பாவம் அது அவங்க தலை எழுத்து.

    ReplyDelete
  5. சூப்பர் பாஸ்!!

    ReplyDelete
  6. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    தெளிவூட்டும் பதிவுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. மத்திய அரசிடம் சொல்லி மின் பற்றாக்குறையை போக்குங்கள்... காவிரி பிரச்சனையை தீர்த்து வையுங்கள்... அன்னிய முதலீட்டில் நடுநிலையாக இருங்கள்... குவித்த சொத்துக்களை நாட்டுக்கு அர்பணியுங்கள்.... ஈழத்தமிழ்களுக்கு ஒரு நாள் உண்மையாக போராடுங்கள்....// இது எதுவுமே செய்ய வேண்டாம் பேசாம அவரை வாயை மூடிக்கிட்டு எந்த அறிக்கையும் விடாம இருக்க சொல்லுங்க அது போதும்.... அவரோட சமீபத்திய காமெடி மத்தியில அன்னிய முதலீட்டை ஆதரிச்சுட்டு, தமிழகத்துல அதை அனுமதிக்க கூடாதாம். என்ன ஒரு தெளிவான பார்வை...

    ReplyDelete
  8. சிலருக்கு உலகமே குடும்பம்;சிலருக்கு குடும்பமே உலகம்!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...