கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 December, 2012

விஸ்வரூபம் படத்தை இலவசமாக பார்க்க


கமலுக்கு இதுபோராத காலம் போல... பொதுவாக பணம்போட்டு படம் எடுக்கிறவங்க எப்படியாவது போட்டபணத்தை எடுக்கனும் என்ற எண்ணத்தில்தான் படத்தை ரீலிஸ் பண்றாங்க. ஆனா அவற்றையும் மீறி படம் ஊத்திக்கிட்டுப்போகுது. 

கமல் பொருத்தவரை போட்ட பணத்தை எடுத்தா போதும் என்ற மனப்பான்மையிலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் இது அவருக்கு லாபத்தை கொடுக்குமா இல்லை  நஷ்டத்தை கொடுக்குமா தெரியவில்லை.

பொதுவாக இந்த திருட்டு விசிடி-காரங்க படம் வந்த முதல் நாள் முதல் காட்சியிலே ஏதாவது ஒரு தியாட்டர்ல புகுந்து படத்தை காப்பி எடுத்துடுராங்க. படம் ரிலீஸ் ஆன மறுநாள் கேமரா பிரிண்ட்ல படம் DVD-ஆ எல்லோருக்கும் கிடைக்க ஆரம்பிச்சிடும்.


விஸ்வரூபம் படத்தை வரும் ஜனவரி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தப் படத்தை இந்தியா முழுவதும் டிடிஎச்சில் பார்க்கலாம் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கார் கமல்.

ஏர்டெல் டிடிஎச்சின் தமிழுக்கு ரூ 1000 ம், தெலுங்குக்கு ரூ 500 ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கமல் அறிவிப்புப்படி, தியேட்டர்களில் வெளியாவதற்கு (வெளியாகுமா?!) 12 மணி நேரம் முன்னதாக டிடிஎச்சில் தமிழ், தெலுங்கு விஸ்வரூபத்தைக் காணலாம்.

இப்படி இருந்தா படம் ரிலீஸ்-க்கு முன்னதாகவே திருட்டு DVD-யில   விரைவாக படம் வெளிவரதற்கு வாய்ப்பிருக்கு. அவர் DTH- படதைத் காப‌ி பணண்முடயிது என்று சொல்லியிருக்கார். நம்ம ஆளுங்க எல்லாத்தையும் பார்ப்பாங்க. பொதுவாக DVD-யில் முதல் பிரிண்ட் கேமரா பிரிண்டாகத்தான் வரும் இப்ப நல்ல பிரிண்டே கிடைக்கும். அதுவும் படம் ரிலீஸ்க்கு முன்னாடியே.



அதனால படம் ரிலீஸ் ஆகரதுக்கு முன்னாடி இணையத்திலும், திருட்டு விசிடியாகவும் படம் வெளிவர 100 சதவீதம் வாய்ப்பிருக்கு. அப்படி படம்வரும் பட்சத்தில் தியேட்டர்ல படம் எந்தஅளவுக்கு ஓடும் என்று தெரியல அனைத்தையும் பொருத்திருந்து பார்ப்போம்.

தலைப்ப பத்திதானே... படம் ரிலிஸ்க்கு முன்னாடி DTH போடும்போது படம் தியேட்டர்ல வருவதற்கு முன்னதாகவே நாம யூடியூப்புல அல்லது ஏதாவது  ஒரு தளத்துல படத்தை இலவசமாக பார்த்திடம் போல.

9 comments:

  1. நல்லா சொன்னீங்க டீடெய்லு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படம் 11-ந்தேதி தியேட்டர்ல ரிலீஸ் நாம அன்னைக்கு காலையிலே இணைத்தில பார்த்திடலாம் கண்டிப்பாக....

      Delete
  2. நண்பரே நீங்க சொன்னதை பார்த்தா ஏதோ ஸ்பெஷல் ஷோ நீங்க ஆரம்பிச்சு டிக்கெட் தரபோறதா நினைச்சேன்

    ReplyDelete
  3. ஏதோ புதுசா செய்ய ஆசைப்படுறா.பார்ப்போம்ரு

    ReplyDelete
  4. பார்ப்போம்... கமல் வெல்கிறாரா என்று...

    ReplyDelete
  5. சக்குபாய் படம் ரிலீஸ் ஆவறதுக்கு முன்னாடியே எவனோ ஒருத்தன் ஆர்வக் கோளாறுல எக்கச் சக்கமா திருட்டு CD போட்டுட்டான். கடைசியில அவன் போட்ட பணத்தையே எடுக்க முடியாம தலையில துண்டை போட்டுகிட்டான். இந்த படம் எந்த லட்சமனமோ எவனுக்குத் தெரியும்?

    ReplyDelete
    Replies
    1. Das,

      Unga vaayila nalla vaathaiyae varatha...
      இந்த படம் எந்த லட்சமனமோ எவனுக்குத் தெரியும்?

      wish him or just keep quite...

      Delete
  6. அன்பின் சௌந்தர் - பொறுத்திருந்து பார்ப்போம் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...