கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 March, 2011

இனிய தமிழினத்து இளம் பெண்களே..!



ன் இனிய 
தமிழினத்து இளம் பெண்களே..!
உங்களுக்கான என் வேண்டுகோள்கள்...

ள்ளங்கள் சோகத்தால் எரிந்தாலும்
வறுமை நதி உன்னை நோக்கி பாய்ந்தாலும்
உதடுகள் மட்டும் புன்னகை பூக்கட்டும்...

ரங்களில்  நிற்காமல் ஆடும் வளையல்களுக்கு
உரசி உரசி சினுங்கச்சொல்லி
உத்திரவிடுங்கள்..

நெற்றியில் விழும் ஒற்றை முடியோடும்..
அருவியாய் கொட்டும் கூந்தலோடும்
உங்கள் விரல்கள் சினேகம் கொள்ளட்டும்...

லையில் சூட்டிய வண்ண மலர்களை
நொடிக் கொருமுறை தொட்டுப்பார்த்து
இருவருக்குமான உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள்...

பொன் மாலைப் பொழுதில் 
தென்றல் வரும்போதல்லாம்
பறக்க ஆசைப்படும் தாவணியின்
சிறகை முறித்து துன்புறுத்தாதீர்கள்...

ருக்கையில் அமர்ந்து கிளம்பும் போதல்லாம்
உதிர்ந்து கிடக்கும் மல்லிகைக்கு
இறுதியாய் ஒரு முறை 
முகம்காட்டிவிட்டுச் செல்லுங்கள்..

நாணம் கொண்டு தலைதாழ்த்தி நடந்தாலும்
இருவிழிகளில் குடிக்கொண்டிருக்கும்
மீன்களை நீந்திக் களிக்கவிடுங்கள்...
 
டமாடும் வசந்தங்களே...!
தனிமையில் இருக்கும்போது
சோர்ந்து இருக்காதீர்
அமைதி கலைத்து தென்றலோடு பேசுங்கள்..

நிமிடத்திற்கொருமுறை
இமைகளை இமைத்து பரவசப்படுங்கள்...

ழுவும் ஆடைகளை சரி செய்யுங்கள்...
கன்னத்தில் குழிகள் காட்டி களிப்பூட்டுங்கள்...

அதுபோதும்...

தில் எனக்கான நன்மைகள்..

தயத்தில் இறந்துப்‌போன 
இளமைத்திரும்புகிறது..

ரத்தத்தில் நனைந்த 
நரம்புகளில் ‌எல்லாம்
புத்துணர்வு பாய்கிறது..

மூளைப் பழைய நினைவுகளை
கலைந்து விட்டு புதியவனாய் புதுப்பித்துக்கொள்கிறது..

யுளின் தூரங்கள் நீட்டிக்கப்படுகிறது..
இந்த ஜென்மம் பூரணம் அடைகிறது..
 
மற்றும் 
கொஞ்சம் கற்பனைகள்..
கொஞ்சம் கனவுகள்..
சில கவிதைகள்...


கொஞ்சம் பெரிய கவிதை பெறுமையா படிச்சதுக்கு நன்றி..
அன்பா ஒரு கருத்துசொல்லிட்டுப் போங்க..


42 comments:

  1. நான் கிளம்பிட்டேன்
    யாராவது என் பிளாக்கை பாத்துக்குங்க..

    ReplyDelete
  2. ..
    நெற்றியில் விழும் ஒற்றை முடியோடும்..
    அருவியாய் கொட்டும் கூந்தலோடும்
    உங்கள் விரல்கள் சினேகம் கொள்ளட்டும்.....

    நச் வரிகள்.. கலக்குங்க...

    ReplyDelete
  3. சங்கவி said... [Reply to comment]

    ..
    நெற்றியில் விழும் ஒற்றை முடியோடும்..
    அருவியாய் கொட்டும் கூந்தலோடும்
    உங்கள் விரல்கள் சினேகம் கொள்ளட்டும்.....

    நச் வரிகள்.. கலக்குங்க...
    ///வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி...

    ReplyDelete
  4. //////
    உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
    மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
    /////

    என்ன இது..


    http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html

    ReplyDelete
  5. நெற்றியில் விழும் ஒற்றை முடியோடும்..
    அருவியாய் கொட்டும் கூந்தலோடும்
    உங்கள் விரல்கள் சினேகம் கொள்ளட்டும்...

    தலையில் சூட்டிய வண்ண மலர்களை
    நொடிக் கொருமுறை தொட்டுப்பார்த்து
    இருவருக்குமான உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள்..சூப்பர்....கவிதை

    ReplyDelete
  6. கவிதை பெரிதாக இருந்தாலும் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  7. கலக்குங்க கலக்குங்க....

    ReplyDelete
  8. //நழுவும் ஆடைகளை சரி செய்யுங்கள்...
    கன்னத்தில் குழிகள் காட்டி களிப்பூட்டுங்கள்...

    அதுபோதும்...///

    ஆஹா அருமை அருமை......

    ReplyDelete
  9. ’ஹு..ம்’.பெருமூச்சுத்தான் வருகிறது!
    உயிரோட்டமான் கவிதை!

    ReplyDelete
  10. /////////என் இனிய
    தமிழினத்து இளம் பெண்களே..!
    உங்களுக்கான என் வேண்டுகோள்கள்...////////

    ஏண்ணே மத்த பொண்ணுகளுக்கும் சேத்து சொல்லப்படாதா?

    ReplyDelete
  11. /////தலையில் சூட்டிய வண்ண மலர்களை
    நொடிக் கொருமுறை தொட்டுப்பார்த்து
    இருவருக்குமான உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள்...////

    அப்போ மல்லியப்பூ வெச்சிருந்தா என்ன பண்றது?

    ReplyDelete
  12. ///
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    /////////என் இனிய
    தமிழினத்து இளம் பெண்களே..!
    உங்களுக்கான என் வேண்டுகோள்கள்...////////

    ஏண்ணே மத்த பொண்ணுகளுக்கும் சேத்து சொல்லப்படாதா?
    /////

    பார்டர் பிரச்சனை வேணான்னுதான்...

    ReplyDelete
  13. ////////இதயத்தில் இறந்துப்‌போன
    இளமைத்திரும்புகிறது../////////

    என்ன ஒரு 75 வயசு இருக்குமா?

    ReplyDelete
  14. ////
    சங்கவி said... [Reply to comment]

    ..
    நெற்றியில் விழும் ஒற்றை முடியோடும்..
    அருவியாய் கொட்டும் கூந்தலோடும்
    உங்கள் விரல்கள் சினேகம் கொள்ளட்டும்.....

    நச் வரிகள்.. கலக்குங்க...
    //////

    நன்றி சங்கவி..

    ReplyDelete
  15. கும்முன்னு ஒரு படமும் சேத்து போட்டிருந்தா நாங்களும் ஒரு கவித எழுதி இருப்போம்ல......?

    ReplyDelete
  16. ////////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    /////தலையில் சூட்டிய வண்ண மலர்களை
    நொடிக் கொருமுறை தொட்டுப்பார்த்து
    இருவருக்குமான உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள்...////

    அப்போ மல்லியப்பூ வெச்சிருந்தா என்ன பண்றது?
    ////////

    வெண்மையும் ஒரு நிறம்தான்..

    வெள்ளை கலர் என்றுதானே சொல்கிறோம்..

    ReplyDelete
  17. ////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    ////////இதயத்தில் இறந்துப்போன
    இளமைத்திரும்புகிறது../////////

    என்ன ஒரு 75 வயசு இருக்குமா?
    /////

    உங்களுக்கு தா‌னே..

    ReplyDelete
  18. //////////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    கும்முன்னு ஒரு படமும் சேத்து போட்டிருந்தா நாங்களும் ஒரு கவித எழுதி இருப்போம்ல......?
    ///////

    கவிதையா நீங்களா...

    அய்ய்ய்ய்ய்.. அப்ப உங்க சைட்ல அடுத்த பதிவு கவிதை போடுங்க...

    ReplyDelete
  19. ///////
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    //////
    உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
    மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
    /////
    ///////

    வழிகாட்டியதற்கு
    நன்றி பாட்டு ரசிகன்...

    ReplyDelete
  20. //////
    ரேவா said... [Reply to comment]

    நெற்றியில் விழும் ஒற்றை முடியோடும்..
    அருவியாய் கொட்டும் கூந்தலோடும்
    உங்கள் விரல்கள் சினேகம் கொள்ளட்டும்...

    தலையில் சூட்டிய வண்ண மலர்களை
    நொடிக் கொருமுறை தொட்டுப்பார்த்து
    இருவருக்குமான உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள்..சூப்பர்....கவிதை
    //////

    நன்றி ரேவா..

    ReplyDelete
  21. ///////
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    கவிதை பெரிதாக இருந்தாலும் நன்றாக இருந்தது.
    /////

    நன்றி தமிழ் உதயம்..

    ReplyDelete
  22. மறுபடியும் சொல்றேன் நான் இதுல வீக்கு. அதனால ஓட்டு போட்டுட்டு அப்பீட்டு

    ReplyDelete
  23. நன்மைகளின் பட்டியல் என்னை ஆமாம் சொல்ல வைக்கிறது.

    ReplyDelete
  24. ரொம்ப வருசத்திற்கு முன் எழுதிய கவிதையா?

    ReplyDelete
  25. //////
    பாலா said... [Reply to comment]

    மறுபடியும் சொல்றேன் நான் இதுல வீக்கு. அதனால ஓட்டு போட்டுட்டு அப்பீட்டு
    ////////

    நீங்க வந்தாலே போதும்..

    ReplyDelete
  26. ////////
    கலாநேசன் said... [Reply to comment]

    நன்மைகளின் பட்டியல் என்னை ஆமாம் சொல்ல வைக்கிறது.
    /////


    நன்றி..!

    ReplyDelete
  27. ///////
    சாகம்பரி said... [Reply to comment]

    ரொம்ப வருசத்திற்கு முன் எழுதிய கவிதையா?
    /////


    எப்படி கண்டுப்பிடித்தீர்கள்..

    ReplyDelete
  28. ஆதலினால் காதல் செய்வீர் என
    பாரதி சொல்வதைப்போல...
    நீங்களும் உங்களுக்கான
    காரணத்தை மிக அழகாகச்
    சொல்லிப்போகிறீர்கள்,அருமை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. ம்...அழகுக் கவிதை.பெண்களை உற்சாகப்படுத்தும் வரிகள்.சௌந்தர் நிச்சயமாய் நீங்களும் ரசித்து உணர்ந்த கவிதையாயிருக்கும் !

    ReplyDelete
  30. கவிஞ்சரே சத்தியமான விஷயம் அய்யா!

    ReplyDelete
  31. சாரி ஃபார் லேட்... நேத்து ஊர்க்கு போயிட்டேன்

    ReplyDelete
  32. >>நழுவும் ஆடைகளை சரி செய்யுங்கள்...
    கன்னத்தில் குழிகள் காட்டி களிப்பூட்டுங்கள்...

    ஹி ஹி சரி செய்யலைனாலும் நோ வருத்தம்

    ReplyDelete
  33. ////////
    Ramani said... [Reply to comment]

    ஆதலினால் காதல் செய்வீர் என
    பாரதி சொல்வதைப்போல...
    நீங்களும் உங்களுக்கான
    காரணத்தை மிக அழகாகச்
    சொல்லிப்போகிறீர்கள்,அருமை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
    ///////

    நன்றி..

    ReplyDelete
  34. //////
    ஹேமா said... [Reply to comment]

    ம்...அழகுக் கவிதை.பெண்களை உற்சாகப்படுத்தும் வரிகள்.சௌந்தர் நிச்சயமாய் நீங்களும் ரசித்து உணர்ந்த கவிதையாயிருக்கும் !
    //////

    நன்றி..

    ReplyDelete
  35. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    சாரி ஃபார் லேட்... நேத்து ஊர்க்கு போயிட்டேன்
    .....

    பராவயில்லை.. பாஸ்

    ReplyDelete
  36. //////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    கவிஞ்சரே சத்தியமான விஷயம் அய்யா!
    //////

    நன்றி விக்கி..

    ReplyDelete
  37. //////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    >>நழுவும் ஆடைகளை சரி செய்யுங்கள்...
    கன்னத்தில் குழிகள் காட்டி களிப்பூட்டுங்கள்...

    ஹி ஹி சரி செய்யலைனாலும் நோ வருத்தம்
    //////

    என்னது..

    ReplyDelete
  38. அழகிய வரிகள்
    ஆண்கள் எப்படி இருக்க வேண்டும்???

    ReplyDelete
  39. //////
    வேல் தர்மா said... [Reply to comment]

    அழகிய வரிகள்
    ஆண்கள் எப்படி இருக்க வேண்டும்???
    ////


    அதுக்கு ஒரு பதிவு போட்டுட்டா போச்சி..

    ReplyDelete
  40. நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...