கிராமங்கள்...
மக்களை நகரத்திற்கு தத்துக் கொடுத்துவிட்டு
குருவிகளை இழந்த மரமாய்
வெறும் கூடுகளை மட்டுமே
மக்களை நகரத்திற்கு தத்துக் கொடுத்துவிட்டு
குருவிகளை இழந்த மரமாய்
வெறும் கூடுகளை மட்டுமே
சுமந்து கொண்டிருக்கிறது...
கொக்குகள் குடித்தனம் நடத்திய ஏரிகள்
தற்போது புதர்களுக்குள்
முடங்கிப்போய் இருக்கிறது...
தற்போது புதர்களுக்குள்
முடங்கிப்போய் இருக்கிறது...
நிலவுகள் குதித்து ஆடிய ஆற்றுப்படுகை
விண்மீன் நனையக்கூட வழியில்லாமல்
வாடிக்கொண்டிருக்கிறது...
வளையல் ஓசைகளை
கேட்டுக் களித்த வயற்காடுகள்
விளைச்சலை மறந்து வீரியம் இழந்திருக்கிறது...
விளைச்சலை மறந்து வீரியம் இழந்திருக்கிறது...
காதலர்கள் கைகோர்த்து திரிந்த
அந்த கம்மாக்கறை
இன்று இரண்டையும் காணவில்லை...
முக்கால விளக்கு பூஜை
இருவேளை படையல்
வேப்பிலை அணிந்துக் கொண்டு
ஒய்யாரமாய் காட்சி தந்த அம்மனோ...
இன்று பாழடைந்த மண்டபத்தில் ஒண்டிக்கிடக்கிறாள்...
பூக்களோடு புன்னகையும் உதிர்த்துவிட்டு
பசுமையற்றுக்கிடக்கிறது
அன்று காய்த்து கனிந்த மாந்தோப்பு..
வசந்தம் தேவையில்லை
வறட்சியாவது வராமல் இருக்கட்டும்
என காலத்தோடு
போரடிக்கொண்டிருக்கிறது
காக்கையும் குருவியும்...
உலகமே
அமுதம் விளைகிற
அட்சய பாத்திரங்களை அழுக்குப்படுத்தியா
நீ சுகம்காண துடிக்கிறாய்...
தற்போது... நாட்டின் முதுகெலும்புகளில்
கறையான்களின் குடியிருப்பு...
வசந்தத்தை மட்டுமே பாடிய
கிராமத்து குயில்களின் இராஜங்கம்
இன்று கோட்டான் வசம்...
ஒரு காலப் பெட்டகம்
காலனின் கையில்...
ஒரு இயற்கை ஓவியம்
இயற்கை எய்திக்கொண்டு...
இறுதியாய் கிராமங்கள்...
சூரியனைத் தொலைத்துவிட்டு
விடியலைத் தேடிக் கொண்டிருக்கும்
விசித்திரக் கிழக்குகள்...
நிறைகுறைகளை சுட்டிக் காட்டிங்கள்...
அப்போதுதான் என் எழுத்துக்கள் இன்னும் வலுப்படும்...
அப்போதுதான் என் எழுத்துக்கள் இன்னும் வலுப்படும்...
உலகமே
ReplyDeleteஅமுதம் விளைகிற
அட்சய பாத்திரங்களை அழுக்குப்படுத்தியா
நீ சுகம்காண துடிக்கிறாய்...//
விசித்திரக் கிழக்குகள்...??!!
very sad.
மிக அருமை
ReplyDeleteவேரைப் பொசுக்கிவிட்டு
கிளைகளுக்கு உரமிடும்
முட்டாள் அரசியல்வாதிகளுக்கும்
சுய நல அறிிஞர்களுக்கும்
என்றுதான் விழிப்பு வருமோ
அன்றுதான் இந்தத் துயர் தீரும்
மிகச் சிறந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
.காதலர்கள் கைகோர்த்து திரிந்த
ReplyDeleteஅந்த கம்மாக்கறை
இன்று இரண்டையும் காணவில்லை.....
அழகான வரிகள்...
//இறுதியாய் கிராமங்கள்...
ReplyDeleteசூரியனைத் தொலைத்துவிட்டு
விடியலைத் தேடிக் கொண்டிருக்கும்
விசித்திரக் கிழக்குகள்...//
சௌந்தர்!வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்,பாராட்ட!
டும்டும்...டும்டும்..
ReplyDeleteகிராமத்தில் குருவிகளின் கூடுகள் மூடிகிடக்கினறன...
அதில் முதியோர் முடங்கி கிடக்கின்றன...
.////
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
உலகமே
அமுதம் விளைகிற
அட்சய பாத்திரங்களை அழுக்குப்படுத்தியா
நீ சுகம்காண துடிக்கிறாய்...//
விசித்திரக் கிழக்குகள்...??!!
very sad.
/////////
நன்றி ...
/////
ReplyDeleteRamani said... [Reply to comment]
மிக அருமை
வேரைப் பொசுக்கிவிட்டு
கிளைகளுக்கு உரமிடும்
முட்டாள் அரசியல்வாதிகளுக்கும்
சுய நல அறிிஞர்களுக்கும்
என்றுதான் விழிப்பு வருமோ
அன்றுதான் இந்தத் துயர் தீரும்
மிகச் சிறந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
////////
நன்றி..
////
ReplyDeleteசங்கவி said... [Reply to comment]
.காதலர்கள் கைகோர்த்து திரிந்த
அந்த கம்மாக்கறை
இன்று இரண்டையும் காணவில்லை.....
அழகான வரிகள்...
//////
நன்றி சங்கவி...
அற்புதமான, அர்த்தம் பொதிந்த வரிகளுடன் கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் கவிதைகளில் வைரம் இது..
ReplyDeleteசிறப்பான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
நல்லதொரு கவிதைப் பதிவு.
ReplyDeleteஉங்கள் ஃபாலோயர்ஸ் லிஸ்ட் எங்கே இருக்கிறது???
எனக்கு அது புலப்படவில்லை நண்பரே..
என்ன ஒரு யத்தார்த்தமான கவிதை கவிஞ்சா எங்கயோ போயிட்டய்யா!
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteஎல்லோரும் அருமையான வரிகளை சுட்டிக்காட்டி விட்டார்கள். அதனால் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் சொல்லுறேன்.
ReplyDeleteகவிதை சூப்பரோ! சூப்பர்!
அப்புறமா வந்து ஓட்டு போடுறேன்
ReplyDeleteநீர் கவிஞ்ன் நீர் கவிஞ்ன் ஆயிரம் பொற்காசு உமக்கு தான் சொக்கா ......................
ReplyDelete>>
ReplyDeleteதற்போது... நாட்டின் முதுகெலும்புகளில்
கறையான்களின் குடியிருப்பு...
உண்மைதான்
//கிராமங்கள்...
ReplyDeleteமக்களை நகரத்திற்கு தத்துக் கொடுத்துவிட்டு
குருவிகளை இழந்த மரமாய்
வெறும் கூடுகளை மட்டுமே
சுமந்துக்கொண்டிருக்கிறது...//
இனி கூடுகளும் இருக்க போவதில்லை....
//நிலவுகள் குதித்து ஆடிய ஆற்றுப்படுகை
ReplyDeleteவீண்மீன் நனையக்கூட வழியில்லாமல்
வாடிக்கொண்டிருக்கிறது...//
அதான் ஆற்று மண்ணை எல்லாம் வாரிட்டு போயிட்டாங்களே...
//இறுதியாய் கிராமங்கள்...
ReplyDeleteசூரியனைத் தொலைத்துவிட்டு
விடியலைத் தேடிக் கொண்டிருக்கும்
விசித்திரக் கிழக்குகள்...//
சரிதானோ.....!!!
தமிழ்மணத்தில் 7வது ஓட்டு போட்டுட்டேன்...
ReplyDeleteஹி ஹி ஹி ... போன பதிவிற்கு...
////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
//இறுதியாய் கிராமங்கள்...
சூரியனைத் தொலைத்துவிட்டு
விடியலைத் தேடிக் கொண்டிருக்கும்
விசித்திரக் கிழக்குகள்...//
சௌந்தர்!வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்,பாராட்ட!
////
நன்றி தல...
////
ReplyDeleteநையாண்டி மேளம் said... [Reply to comment]
டும்டும்...டும்டும்..
கிராமத்தில் குருவிகளின் கூடுகள் மூடிகிடக்கினறன...
அதில் முதியோர் முடங்கி கிடக்கின்றன...
/////
நன்றி..
////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
அற்புதமான, அர்த்தம் பொதிந்த வரிகளுடன் கவிதை. வாழ்த்துகள்.
///////
நன்றி...
////!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
ReplyDeleteஉங்கள் கவிதைகளில் வைரம் இது..
/////
நன்றி..
////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
சிறப்பான கவிதை..
வாழ்த்துக்கள்..
//////
நன்றி..
////
ReplyDeleteஇந்திரா said... [Reply to comment]
நல்லதொரு கவிதைப் பதிவு.
உங்கள் ஃபாலோயர்ஸ் லிஸ்ட் எங்கே இருக்கிறது???
எனக்கு அது புலப்படவில்லை நண்பரே..
////
அதில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது
விரைவில் சரிசெய்து விடுகிறேன்...
////
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
என்ன ஒரு யத்தார்த்தமான கவிதை கவிஞ்சா எங்கயோ போயிட்டய்யா!
/////
நன்றி விக்கி..
கிராமத்தில் மனிதர்கள் ( மனமும் இல்லையோ?) இல்லாத சோகம் கவிதையில் தெரிகிறது. மனம் இருந்திருந்தால் விடியல் மேற்கில் கூட வரும் திரு.சௌந்தர்
ReplyDeleteகவிதை படித்தபின் கவித்தலைப்பைப் பார்த்தேன்.மிக மிகப்பொருத்தம் !
ReplyDeleteவாழ்க!
ReplyDeleteமாப்ள இன்னும் நீ என்தளத்துக்கு வராததுக்கு கடும் வாழ்த்துக்கள் ஹிஹி!(இப்படியும் மிரட்டுவோம்!)
ReplyDeleteசமூக கருத்துக்களையும் கிராமங்களில் இருந்துவந்த நல்ல விஷயங்கள் இழந்து வருவதைப்பற்றியும் அருமையான கவிதை..!
ReplyDeleteஎன்ன செய்வது உலகம் போகும் பாதையில் போகாவிடின் ஏறிமிதித்து செல்வார்களே..!
////
ReplyDeleteசாகம்பரி said... [Reply to comment]
கிராமத்தில் மனிதர்கள் ( மனமும் இல்லையோ?) இல்லாத சோகம் கவிதையில் தெரிகிறது. மனம் இருந்திருந்தால் விடியல் மேற்கில் கூட வரும் திரு.சௌந்தர்
////
நன்றி..
////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
//இறுதியாய் கிராமங்கள்...
சூரியனைத் தொலைத்துவிட்டு
விடியலைத் தேடிக் கொண்டிருக்கும்
விசித்திரக் கிழக்குகள்...//
நிஜம் நிஜம். விடியுமா கிழக்கு?
///
நன்றி தல..
///
ReplyDeleteஹேமா said... [Reply to comment]
கவிதை படித்தபின் கவித்தலைப்பைப் பார்த்தேன்.மிக மிகப்பொருத்தம் !
//////
நன்றி..
///
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
மாப்ள இன்னும் நீ என்தளத்துக்கு வராததுக்கு கடும் வாழ்த்துக்கள் ஹிஹி!(இப்படியும் மிரட்டுவோம்!)
//
எப்படியெல்லாம் கூப்பிடராங்கப்பா..
////
ReplyDeleteப்ரியமுடன் வசந்த் said... [Reply to comment]
சமூக கருத்துக்களையும் கிராமங்களில் இருந்துவந்த நல்ல விஷயங்கள் இழந்து வருவதைப்பற்றியும் அருமையான கவிதை..!
என்ன செய்வது உலகம் போகும் பாதையில் போகாவிடின் ஏறிமிதித்து செல்வார்களே..!
//////
நன்றி..
அருமையான வைர வரிகள் பாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
ஃஃஃஃவளையல் ஓசைகளை
ReplyDeleteகேட்டுக் களித்த வயற்காடுகள்
விளைச்சலை மறந்து வீரியம் இழந்திருக்கிறது..ஃஃஃஃ
அட அட அட என்ன ஒரு வரி அருமைங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...