அன்பான பதிவுலகமே.. புதிய தலைப்பில் சமுதாய அக்கறையை இங்கே பதிவு செய்கிறேன். இவை நாமும் குற்றவாளி என்ற தோரணையில்...
ஒரு காலத்தில் இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு புரட்சிகள் மூலம் சமூதாயத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த கட்சிகள் பிற்காலங்களில் நாட்டின் மறுமலர்ச்சிக்கும், அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடிவுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டது. அப்போது கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களை பின்பற்ற தொடங்கினார்கள். நாட்டின் நட்சத்திரங்களாக அவர்கள் உயர்ந்தார்கள். மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.
அவர்கள் செய்த செயல்கள் அவர்களின் வாழ்க்கை அவர்களின் கொள்கைகள் எல்லாம் பொன் எழுத்துக்களால் என்றும் பொறிக்கப்பட வேண்டியவை. ஆனால் இன்று நாட்டை சோம்பேறிகளின் சொர்க்க பூமியாக ஆக்கி விடுவார்கள் போல தெரிகிறது. அவர்கள் இது போன்று ஆனதற்கு நாமும் ஒரு காரணம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இது நியாயம் தானா? :
நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாம் 1000 ரூபாய் முதலீடு செய்து ஒரு தொழில் செய்கிறோம் என்றால் அவற்றை இரட்டிப்பாக்க முறச்சிக்கிறோம். குறைந்த பட்சம் போட்ட முதலை விட அதிகமாக சம்பாதிக்க ஆயத்தப்படுகிறோம். இன்று அரசியல் தொழிலும் அப்படித்தான் ஆகிவிட்டது. ஓட்டுக்கு பணம், விளம்பரச் செலவுகள், கூட்டம் கூட்ட பணம் செலவு செய்தல், ஆட்சிக்கு வந்தப்பிறகு மக்களுக்கு இலவசப் பொருட்கள் என பொது மக்கள் வாங்கிக் கொண்டால். பிறகு எப்படி அரசியல் வாதிகளை நாட்டிக்கு நல்லது செய்யகள் என்று எதிர்பார்க்க முடியும்.
ஒரு முறை சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க சென்றோம். அப்போது ஊர் பிரச்சனையை பற்றி விவாதிக்கும் போது.. சும்மாவா ஓட்டுப் போட்டார்கள் காசு வாங்கினுதானே ஓட்டு போட்டார்கள்.. என்று மறுத்து அனுப்பினார். உண்மைதான் ஒரு ஓட்டுக்கு 500, 1000 என வாங்கிக்கொண்டு பிறகு நமது பகுதிக்கு ஏதும் செய்ய வில்லை என்பதில் அர்த்தம் இருக்கிறதா.
தற்போது பாருங்கள் கட்டிக்கொடுக்கும் பெண்ணுக்கும் தரும் சீர்வரிசையைப்போல் ஏராளமான பொருள்கள் தருவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதை கருத்தில் கொண்டே வாக்களிக்க தயாராகி கொண்டிருப்பார்கள். அப்படியென்றால் அவசிய தேவைகளான சாலை, குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், வேலைவாய்ப்பு, கல்வி இவற்றின் மேம்பாட்டிற்கு எந்த அறிவிப்புகளும் இல்லை. இலவசங்கள் மட்டும் கொடுத்தால் போதுமா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஆகியவற்றை தருகிறார்கள் சரி அவற்றிற்கான மின்சாரத்தை எப்படி அதிகரிக்கப் போகிறார்கள். (தற்போதே தமிழகத்தின் எல்லா பகுதியிலும் 3 மணிநேர மின் தடை அமுலில் இருக்கிறது)
வேலை வாய்ப்புகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தினால் அனைத்து வசதிகளையும் மக்களே ஏற்படுத்திக் கொள்ளப் போகிறார்கள். அது ஆள்பவர்களுக்கும் தெரியும் ஆனால் என்ன செய்ய மக்களின் பலவீனம் இப்படி இருக்கிறது.
இப்படி இலவசங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு நாட்டின் ஆட்சி சரியில்லை, ஆட்சியாளர்கள் சரியில்லை, நாட்டின் பொருளாதார நிலை சரியில்லையென குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம். ஆட்சியாளர்களை மாற்றியது மக்களா.. அல்லது மக்களை மாற்றியது ஆட்சியாளர்களா என்பதில் விவாதித்தால் இறுதியாய் இரண்டு நிலையிலும் பாதிப்படைவது மக்களே.. மக்களே...
இலவசங்களை வெறுத்து சமுதாய அக்கரையுடன் யோசிப்போம்.. அப்போதுதான் எதிர்காலத்தில் அரசியல் மக்களுக்காக இருக்கும். அமெரிக்காவே பொருளாதார சூழலில் சிக்கித்தவித்த இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற இலவசங்கள் நாட்டை என்ன செய்யும் என்று ஏன் யாரும் யோசிக்காததுதான் வெட்கக்கேடு.
இது என்தரப்பு நியாயம் தான் உங்கள் தரப்பு நியாயத்தையும்
பதிவு செய்யுங்கள்..
பதிவு செய்யுங்கள்..
இதுகுறித்து நானும் ஒரு பதிவு போடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
ReplyDeleteநண்பா நாமும் ஒரு காரணமல்ல நாம் தான் காரணம்.........உயிர் கொடுக்க தெரிந்த நமக்கு எடுக்க தெரிய வேணும் ஹிஹி!
ReplyDelete////////பாலா said... [Reply to comment]
ReplyDeleteஇதுகுறித்து நானும் ஒரு பதிவு போடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
//////
ம் போடுங்க..
////
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
நண்பா நாமும் ஒரு காரணமல்ல நாம் தான் காரணம்.........உயிர் கொடுக்க தெரிந்த நமக்கு எடுக்க தெரிய வேணும் ஹிஹி!
////
உண்மைதாங்க...
அரசியல் வாதிகளுக்கு ஒரு சவுக்கடி..
ReplyDeleteஒரு முறை சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க சென்றோம். அப்போது ஊர் பிரச்சனையை பற்றி விவாதிக்கும் போது.. சும்மாவா ஓட்டுப் போட்டார்கள் காசு வாங்கினுதானே ஓட்டு போட்டார்கள்.. என்று மறுத்து அனுப்பினார்.
ReplyDelete.......சரியா போச்சு! அதற்கு பின்னாவது அந்த ஊரு மக்கள் விழித்துக் கொண்டார்கள் என்று நம்புகிறேன்.
ஆட்சியாளர்களை மாற்றியது மக்களா.. அல்லது மக்களை மாற்றியது ஆட்சியாளர்களா என்பதில் விவாதித்தால் இறுதியாய் இரண்டு நிலையிலும் பாதிப்படைவது மக்களே.. மக்களே...
ReplyDelete....Reality bites!
நமக்கு நாமே இந்த நியாயங்கள் சரியானதுதான் என ஒப்புக் கொண்டு இலவசங்களை தவிர்க்க வேண்டும்..
ReplyDeleteதலைப்பே கவிதை டெரரா இருக்கு...
ReplyDeleteகலக்குங்க..
இலவசங்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களை அப்புறப்படுத்துவோம்.
ReplyDeleteஇதை விட பெரிய செருப்படி இருக்காது சகோதரம்... ஆணித்தரமான வாதம்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
////
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
அரசியல் வாதிகளுக்கு ஒரு சவுக்கடி..
/////////
நன்றி.. கருன்...
@Chitra
ReplyDeleteஏமாறும் மக்கள் இருக்கும் வரை இவர்கள் திருந்த மாட்டார்கள்..
////
ReplyDeletehitra said... [Reply to comment]
ஆட்சியாளர்களை மாற்றியது மக்களா.. அல்லது மக்களை மாற்றியது ஆட்சியாளர்களா என்பதில் விவாதித்தால் இறுதியாய் இரண்டு நிலையிலும் பாதிப்படைவது மக்களே.. மக்களே...
....Reality bites!
//////
நன்றி.. சித்ரா..
இது என்தரப்பு நியாயம் தான் உங்கள் தரப்பு நியாயத்தையும் பதிவுச்செய்யுங்கள்..
ReplyDelete//
ப்ளாக் ..ரொம்ப கலர்கலரா இருக்கு..!!!
மாற்றங்கள் வர ஒரே வழி..
ReplyDelete500 குழந்தைகளை , தனியா பிரித்து.. கண்காணாத இடத்தில் வைத்து.. அறிவைக்கொடுத்து.. நாட்டை அவர்களிடம் ஒப்படைத்துவிடவேண்டும்.
எத்தனை விழுக்காடு மக்கள் யோசித்து வாக்களிப்பார்கள் நண்பரே?
ReplyDeleteஇங்கு யாரும் திருந்தப் போவதில்லை!
///
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
நமக்கு நாமே இந்த நியாயங்கள் சரியானதுதான் என ஒப்புக் கொண்டு இலவசங்களை தவிர்க்க வேண்டும்..
///
நன்றி கருன்..
////
ReplyDeleteஆகாயமனிதன்.. said... [Reply to comment]
தலைப்பே கவிதை டெரரா இருக்கு...
கலக்குங்க..
///
நன்றி..
////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
இலவசங்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களை அப்புறப்படுத்துவோம்.
//////
நன்றி உதயம்..
////
ReplyDelete♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]
இதை விட பெரிய செருப்படி இருக்காது சகோதரம்... ஆணித்தரமான வாதம்...
/////
நன்றி மதி..
///
ReplyDeleteபட்டாபட்டி.... said... [Reply to comment]
இது என்தரப்பு நியாயம் தான் உங்கள் தரப்பு நியாயத்தையும் பதிவுச்செய்யுங்கள்..
//
ப்ளாக் ..ரொம்ப கலர்கலரா இருக்கு..!!!
///
நனறி பட்டாபட்டி..
///
ReplyDeleteபட்டாபட்டி.... said... [Reply to comment]
மாற்றங்கள் வர ஒரே வழி..
500 குழந்தைகளை , தனியா பிரித்து.. கண்காணாத இடத்தில் வைத்து.. அறிவைக்கொடுத்து.. நாட்டை அவர்களிடம் ஒப்படைத்துவிடவேண்டும்.
//
நல்ல ஐடியா தான்..
இப்படி இலவசங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு நாட்டின் ஆட்சி சரியில்லை, ஆட்சியாளர்கள் சரியில்லை, நாட்டின் பொருளாதார நிலை சரியில்லையென குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்.//
ReplyDeleteசூப்பர் கேள்வி
இலவசம் ஆபத்தான பாதை
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே!
ReplyDeleteஎல்லா தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம்..
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் இலவசங்களை கண்டிப்பாக ஒதுக்கவேண்டும் அப்போதுதான் நாடு உருப்படும்..
நண்பரே யாருக்கும் பயப்படவேண்டாம் தைரியமாக தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்..
ReplyDeleteகுறைகளை சுட்டிக்காட்டி தங்களின் பாதையில் ஏற்படும் தடைகளுக்கு தாங்கள் தயங்கவேண்டாம்...
//இலவசங்களை வெறுத்து சமுதாய அக்கரையுடன் யோசிப்போம்.. அப்போதுதான் எதிர்காலத்தில் அரசியல் மக்களுக்காக இருக்கும்///
ReplyDeleteசரியான வரிகள்...
//ஆட்சியாளர்களை மாற்றியது மக்களா.. அல்லது மக்களை மாற்றியது ஆட்சியாளர்களா என்பதில் விவாதித்தால் இறுதியாய் இரண்டு நிலையிலும் பாதிப்படைவது மக்களே.. மக்களே//
ReplyDeleteமறுக்க முடியாத உண்மை....
எவ்வளவோ காட்டு கத்து கத்தி பார்த்தாச்சு நம்ம மக்களுக்கு...வேற என்னத்தை சொல்ல....
ReplyDeleteஇதே கருத்தை வலியுறுத்தி நானும் ஒரு பதிவிட்டுள்ளேன் பார்க்க...
ReplyDeletehttp://ragariz.blogspot.com/2011/02/blog-post_05.html
///
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
இப்படி இலவசங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு நாட்டின் ஆட்சி சரியில்லை, ஆட்சியாளர்கள் சரியில்லை, நாட்டின் பொருளாதார நிலை சரியில்லையென குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்.//
சூப்பர் கேள்வி
///
உண்மையாகவே...
///
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
இலவசம் ஆபத்தான பாதை
////
நன்றி.
////
ReplyDelete! சிவகுமார் ! said... [Reply to comment]
நல்ல பதிவு நண்பரே!
//////////
நன்றி குமார்..
///
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
எல்லா தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம்..
சரியாக சொன்னீர்கள் இலவசங்களை கண்டிப்பாக ஒதுக்கவேண்டும் அப்போதுதான் நாடு உருப்படும்..
///////
உண்மைதான்
////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
நண்பரே யாருக்கும் பயப்படவேண்டாம் தைரியமாக தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்..
குறைகளை சுட்டிக்காட்டி தங்களின் பாதையில் ஏற்படும் தடைகளுக்கு தாங்கள் தயங்கவேண்டாம்...
/////////
தங்கள் ஆதரவுக்கு நன்றி பாட்டு ரசிகன்..
/////////
ReplyDeleteசங்கவி said... [Reply to comment]
//இலவசங்களை வெறுத்து சமுதாய அக்கரையுடன் யோசிப்போம்.. அப்போதுதான் எதிர்காலத்தில் அரசியல் மக்களுக்காக இருக்கும்///
சரியான வரிகள்...
///////
நன்றி சங்கவி...
/////////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//ஆட்சியாளர்களை மாற்றியது மக்களா.. அல்லது மக்களை மாற்றியது ஆட்சியாளர்களா என்பதில் விவாதித்தால் இறுதியாய் இரண்டு நிலையிலும் பாதிப்படைவது மக்களே.. மக்களே//
மறுக்க முடியாத உண்மை....
/////////
நன்றி மனோ..
///
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
இதே கருத்தை வலியுறுத்தி நானும் ஒரு பதிவிட்டுள்ளேன் பார்க்க...
http://ragariz.blogspot.com/2011/02/blog-post_05.html
//////
நன்றி ...
நல்ல பதிவு நண்பரே..இதற்கு நாம் தான் காரணம்.
ReplyDeleteஅடேங்கப்பா... போட்டுத்தாக்குங்க... எப்போ இலவசம் வேணும்னு மக்கள் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்களோ அப்பவே நாடு அழிவுப்பாதைல போகப்போவுதுன்னு தெரின்ச்ஜ்டுச்சு
ReplyDeleteவணக்கம் பாஸ்....
ReplyDeleteநியாயங்கள் நியாயங்கள் தான் பாஸ்..
யாரு கேக்க போறாங்க??
தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html
மனம் கொதிக்கிறது நண்பரே .......
ReplyDeleteநல்ல பதிவு .............
அன்பின் சௌந்தர் - பொறுத்திருந்து பார்க்கலாம் - என்ன செய்கிறார்கள் என்று. அவசரப்பட வேண்டாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநண்பருக்கு,
ReplyDeleteஇலவசங்கள் யார் பணத்தில் இருந்த்து கொடுக்கப்படுகிறது. கட்சி ப்ணத்தில் இருந்தா? இல்லை தலைவர் களின் கை பணத்தில் இருந்தா, ?
நிங்களும், நானும் கட்டிய வரிப்பணத்தில் இருந்து.சோம்பேரிகளை வளர்க்கும் இந்த நாட்டில்,உழைபவன் முட்டாள்.
இவர்கள் யார் பணத்தில் இரண்டு முன்று சுமோ, சொகுசு கார், பத்து பதினைந்து அடியாட்கள்,சில மனைவிகள்,பங்களாக்கள்,என்று சுக போகங்களில் மூழ்கி முத்தெடுக்கிறார்கள்
ஏழைகள் செலுத்தும் மறைமுக வரிப் பணம்.
நாகராஜன்