உள்ளத்தில் வேதனைதான்
உன் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளால்,,,
ஒருகனம் உன் சிந்தனையை
ஓடிப்போன நாட்களோடு ஓட விட்டுப்பார்,,,
அதில் அன்பாய் இருக்கும் என்னோடு
நீ அன்பு காட்டிய நாள் இல்லை,,,
நீ தெரிந்து இழைத்த தவறுக்காய்
நான் கோவப்படவும் இல்லை
நீ மன்னிப்புக் கோரவும் இல்லை,,,
நீயே கிழித்துக்கொண்ட உன் சட்டைக்காக
உன் தாயாரிடம் மண்டியிட்டுள்ளேன் நான்
மௌனித்திருந்தாய் நீ,,,
மாங்காய் திருடிவிட்டு
தோப்புகாரனிடம்
மாட்டிக்கொண்ட போதும்,,,
டிக்கெட் வாங்காமல் சோதனையாளரிடம்
பதில் சொல்ல முடியாமல்
விழித்துக்கொண்டிருந்த போதும்....
முக்கிய தேர்வு என்று தெரிந்தும்
வராத பள்ளி நாட்களில்
உனக்காக வாதாடியதும்...
எனது கடமையாயிருந்தது...
ஓ... நண்பனே
என் உண்மையான நட்பை
எத்தனையோ முறை உணர்த்திருக்கிறேன்...
நீயோ அதிலிருந்து
ஒதுங்கியே இருந்திருக்கிறாய்...
ஆனால்
கடந்த மாதம் வாங்கிய
இருபது ரூபாவை திருப்பித் தந்து விட்டு
எப்படி சொல்ல முடிகிறது
உனக்கும் எனக்கும்
கடன் ஏதும் இல்லையென்று....
முந்தையப் பதிவு :
நேற்று இந்தியாவை கொண்டாட வைத்த
தன்னம்பிக்கை தருணங்கள்..
இன்னும் ஒரு போர்... ஒரு போட்டி... ஒரு சாதனை...
காத்திருப்போம் அந்த தருணத்திற்காக...
பதில் சொல்ல முடியாமல்
விழித்துக்கொண்டிருந்த போதும்....
முக்கிய தேர்வு என்று தெரிந்தும்
வராத பள்ளி நாட்களில்
உனக்காக வாதாடியதும்...
எனது கடமையாயிருந்தது...
ஓ... நண்பனே
என் உண்மையான நட்பை
எத்தனையோ முறை உணர்த்திருக்கிறேன்...
நீயோ அதிலிருந்து
ஒதுங்கியே இருந்திருக்கிறாய்...
ஆனால்
கடந்த மாதம் வாங்கிய
இருபது ரூபாவை திருப்பித் தந்து விட்டு
எப்படி சொல்ல முடிகிறது
உனக்கும் எனக்கும்
கடன் ஏதும் இல்லையென்று....
முந்தையப் பதிவு :
கோமாளி செல்வாவும் விண்டோசும்...!
நேற்று இந்தியாவை கொண்டாட வைத்த
தன்னம்பிக்கை தருணங்கள்..
இன்னும் ஒரு போர்... ஒரு போட்டி... ஒரு சாதனை...
காத்திருப்போம் அந்த தருணத்திற்காக...
10 வகுப்பு தேர்வுப் பணிக்கு செல்கிறேன்..
ReplyDeleteமாலை சந்திக்கிறேன்..
அடடா என்ன ஒரு கவிதை நடத்துய்யா!
ReplyDeleteஇன்னைக்கு என்ன ஒரே ஷைனிங்கா இருக்கு?
ReplyDeleteநல்ல நண்பன்தான்!
ReplyDeleteஅவசியம் பாருங்கள் இன்றைய பதிவு”வலைப்பூக் கவுஜ”
வந்துட்டேன்
ReplyDeleteமேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html
மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது
அசத்தல் கவிதை..
ReplyDeletevery nice post....photos too.
ReplyDeleteஅசத்தல் கவிதை நண்பரின் நட்புக்கான ஏக்கம் கவிதையில் தெரிகிறது...
ReplyDeleteதாங்கள் கிரிக்கெட் ரசிகரா படங்கள் சூப்பர்..
ReplyDeleteஉலக கோப்பை தமக்குதான்...
///கடந்த மாதம் வாங்கிய
ReplyDeleteஇருபது ரூபாவை திருப்பித் தந்து விட்டு
எப்படி சொல்ல முடிகிறது
உனக்கும் எனக்கும்
கடன் ஏதும் இல்லையென்று..../// கடன் வாங்கிய பின் புரிந்துகொண்டிருப்பாரோ "கடன் அன்பை முறிக்கும்" என்று))) . நல்ல கவிதை...
இந்தியாவுக்கு தான் இந்த உலகக்கிண்ணம் ...http://nekalvukal.blogspot.com/2011/03/viii.html
//கடந்த மாதம் வாங்கிய
ReplyDeleteஇருபது ரூபாவை திருப்பித் தந்து விட்டு
எப்படி சொல்ல முடிகிறது
உனக்கும் எனக்கும்
கடன் ஏதும் இல்லையென்று....//
இப்பிடியும் சில நட்பு'கள் இருக்கத்தான் செய்கிறது ம்ம்ம் வேதனை...
//மாங்காய் திருடிவிட்டு
ReplyDeleteதோப்புகாரனிடம்
மாட்டிக்கொண்ட போதும்,,,
டிக்கெட் வாங்காமல் சோதனையாளரிடம்
பதில் சொல்ல முடியாமல்
விழித்துக்கொண்டிருந்த போதும்....
முக்கிய தேர்வு என்று தெரிந்தும்
வராத பள்ளி நாட்களில்
உனக்காக வாதாடியதும்...
எனது கடமையாயிருந்தது...//
அருமை அருமை மக்கா...
////
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
அடடா என்ன ஒரு கவிதை நடத்துய்யா!
/////
நன்றி விக்கி...
///
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
இன்னைக்கு என்ன ஒரே ஷைனிங்கா இருக்கு?
////////
எல்லாம் அப்படித்தான்..
///
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
நல்ல நண்பன்தான்!
அவசியம் பாருங்கள் இன்றைய பதிவு”வலைப்பூக் கவுஜ”
//////
நன்றி..
போட்டோ அருமை. கவிதை அழகு.
ReplyDeleteதலைப்பு செமத்தியா வைக்கறீங்க
ReplyDeleteகவிஞரே...நீ ஒரு வார்த்தை சித்தன் ஹிஹி
ReplyDeleteகவிதை அருமை.நட்பில் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.கடமையை செய் பலனை எதிர்பாராதே.என்றாவது ஒருநாள் உங்கள் உண்மை நட்பு பற்றி நண்பர் உணர்வார்.அதுவரை காத்திருங்கள்.
ReplyDeleteஎன்றும் உங்கள்
சித்தாரா மகேஷ்
தேனின் மகிமை
அன்பின் சௌந்தர் - கவிதை அருமை - சிந்தனை நன்று - நடை இயல்பான நடை - வேறு ஒரு கடனும் இல்லை எனச் சொல்லும் நண்பர்க்ளை என்ன செய்வது ...... நட்பின் பொருட்டு மறக்கலாம் - மன்னிக்கலாம் - நட்பினைத் தொடரலாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete