கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 December, 2012

இது ஒரு கண்டன மற்றும் எதி்ர் பதிவு...
திர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கிக்கிடக்கிறேன்
தினமும் எதிர்படும் நீ
இன்றும் எதிர்படுவாய் என்று.... 

தினமும் எதிர்படும் என்னை
உதாசினப்படுத்திவிட்டு போவாய்
இருந்தும் நான்
எதிர்பார்ப்பதை கைவிடவில்லை...

தெரிந்தும் மற்றும் தெரியாத
முகங்கள் எதிர்படுகையில்
அவர்களுக்கான பதிவுகளை 
சிறு மூளை ஞாபகபடுத்துவதில்லை
உன்னை எதிர்பார்த்து நிற்கும் எனக்குள்...

ன்றொறுநாள் எதிர்படுகையில்
விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...

ன்னும் எவ்வளவு நேரம் 
எதிர்பார்த்துக் கொண்டிருப்பது...

பெண்ணே...
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் கனவுகளுக்கு வந்து காட்சிக்கொடு

ன் கருவிழிகள் கண்டனங்கள் 
தெரிவிக்கும் முன்...

(அப்பா... ‌எப்படியோ எதிர்பதிவு என்பதால் அதிக இடத்தில் எதிர் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டேன், கண்டனம் என்ற வார்த்தையில் கவிதை முடிகிறது..... ஏங்க இது டிஸ்கிங்க)

உங்கள் விருப்பம்போல் பின்னூட்டங்கள் இடலாம்..
(மீள் பதிவு)

4 comments:

  1. ம்ம்...சூப்பர் ..பதிவும் தலைப்பும்

    ReplyDelete
  2. ரொம்பவே எதிர்ப்பார்க்க வெச்சிட்டீங்க! அருமை!

    ReplyDelete
  3. கழுதை........ சீ....... கவிதையை எனக்கு ரசிக்கத் தெரியாதுங்க சார்.........

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...