கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 August, 2013

அட.. இந்த பெண்களே இப்படித்தானா?
இருக்கும் கருமையை விலக்க விரும்பி
எத்தனை முயச்சிகள் இங்கு...

வெட்கப்பட்டால் சிவக்கும் கன்னத்துக்கு
வெட்கமில்லாமல் எதையோ பூசுகிறாய்...

மெய்பூச  வேண்டிய உதடுகளுக்கு ஏன்
பொய் பூசிக்கொண்டிருக்கிறாய்...

சிரிக்கும் பூக்களை சிதறவிட்டுவிட்டு
அப்படி என்ன சிநேகம் உனக்கு செயற்கைகளோடு...

ம்...
இன்னும் எத்தனை  எத்தனை முயற்சி
உலகிற்கு பொய்முகம் காட்ட...!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

8 comments:

 1. வெட்கமில்லாமல் ஏதையோ பூசுகிறாய்...//????

  ReplyDelete
 2. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கிறீம் எல்லாம் பூசுகின்றார்களே. :)

  சில சமயம் பொய்முகம் காட்ட வேண்டியும் இருக்கின்றதே காலத்தின்கோலம். என்னசெய்வது.

  ReplyDelete
 3. அழகுக்கு ஒப்பனை எதற்கு!
  நன்று ஆசிரியர் ஐயா

  ReplyDelete
 4. "வெட்கப்பட்டால் சிவக்கும் கன்னத்துக்கு
  வெட்கமில்லாமல் எதையோ பூசுகிறாய்"

  ரசிக்கவைத்த அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...