கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 August, 2013

இப்போது பெயரில் என்ன இருக்கிறது...! /// 700 -வது பதிவுபொய் சொல்வதையே 
பிழைப்பாக கொண்டிருந்தார்
அடுத்ததெரு அரிச்சந்திரன்....


வசரம் என்று உதவிகேட்டால்
தவறாமல் செய்கிறார் பத்துவட்டிக்கு
எங்க ஊர் காந்தி...!


டுத்தவன் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு 

அத்தனையையும் எனக்கே என்கிறார்
கடைசி தெரு புத்தன்...!


ன்வீட்டு விளக்கொளி

அடுத்தவர் வீட்டில் விழுகிறது என்பதற்காக
விளக்கை அணைத்தார் பக்கத்துவீட்டு பாரி...


ருக்கென்றால் உபதேசித்து
தனக்கென்று வந்தபோது கருவருத்தார்
கலியுகக் கண்ணன்...

 ற்போது பெயரில் ஒன்றும் இருப்பதில்லை
அழைக்கவும்... 

அடையாளம் சொல்லவும் தவிர...


கவிதைவீதியின்  -வது பதிவு....

ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி..!

32 comments:

 1. 700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்க

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ...ஒரு சின்ன திருத்தம் செல்ல ஆசை ..இல்லை இல்லை .சொல்ல ஆசை ...கடைசி வரியில் செல்லவும் என்பதை ..சொல்லவும் என திருத்தவும் .

  ReplyDelete
  Replies
  1. சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

   பிழையை சரிசெய்து விட்டேன்...
   நன்றி

   Delete
 3. ஸார் எனக்கொரு டவுட்டு

  பதிவு அருமைன்னு பின்னூட்டவா ? இல்ல
  700 பதிவுக்கு வாழ்த்துக்கள்ன்னு பின்னூட்டவா ?

  ஹா ஹா ஹா நோ நோ நோ அப்படி எல்லாம் மொறைக்கக் கூடாது

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விருப்பம் போல் செய்யுங்க சீனு...

   Delete
 4. 700 அடிச்சதுக்கு சாரி பதிவுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 5. 700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்,....

  ReplyDelete
 6. 700க்கு வாழ்த்துக்கள் நண்பா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சங்கவி...

   கருத்திற்கு மிக்க நன்றி

   Delete
 7. மீண்டும் ஷேக்ஸ்பியர்!

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கனும்...
   நான் அவருடைய கடைசி ரசிகன்....

   ரசித்தமைக்கு மிக்க நன்றி

   Delete
 8. கவிதைக்கான கருவும் வெளிப்பட்டவிதமும் சிறப்பு! 700வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்திற்கும்... வாழத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ்...

   Delete
 9. 700வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

  கவிதை கலக்கல்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி குமார்

   Delete
 10. //தன்வீட்டு விளக்கொளி
  அடுத்தவர் வீட்டில் விழுகிறது என்பதற்காக
  விளக்கை அணைத்தார் பக்கத்துவீட்டு பாரி...//
  அருமை.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சகோ .தொடர்ந்தும் கலக்குங்க !!

  ReplyDelete

 12. அவன் அவன் 100 , 200 அடிச்சாலே தலைசுத்தி கிறு , கிறுன்னு ஆகிடுராணுக ஆனா நீ 700 அடிச்சும் ஸ்டெடியா நிக்கிறபார் நீதான்யா மறத்தமிழன் :-)))))

  ReplyDelete
 13. அன்பின் சௌந்தர் - 700 பதிவுகள் அசராமல் இட்டு - அனைவரையும் கவர்ந்தது பாராட்டுக்குரியது. விரைவினிலேயே 1000 பதிவினை எட்ட நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. அருமையான கவிதைகள்... அருமை என்று சொல்வதை விட இன்றைய நிதர்சனத்தை படம் பிடித்து காண்பித்த கவிதைகள் ..700 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. thinamum pitchai kattu warum nafar SEEMAAN,

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...