கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 August, 2013

உயிரை பணயம் வைத்த கமல்... விஸ்வரூபம்-2 அப்டேட்ஸ்...!கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய மைல்கல் என்றே சொல்லப்படுகிறது. அதிலும் முக்கியமாக கமல்ஹாசனின் கடும் உழைப்பில் உருவாகியிருந்த ஆக்‌ஷன் காட்சிகள் இன்று வரை பேசப்படுகின்றன. இத்தகைய விஸ்வரூப வெற்றியைக் கண்ட திரைபப்டத்தின் அடுத்த பாகத்தில் தான் தற்போது கமல்ஹாசன் நடித்துக்கொண்டுவருகிறார்.


முதல் பாகத்தையே பிரம்மாண்டமாக எடுத்துவிட்ட கமல்ஹாசன் அடுத்த பாகத்தை அதைவிட அதிகமாக எடுத்துவிடும் முடிவில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின் போது இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதும்போது கமல்ஹாசன் ஒரு காரிலிருந்து வெளியே குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டண்ட் இயக்குனர்கள் ’டூப்’ பயன்படுத்திக்கொள்ள எவ்வளவோ அறிவுறுத்தியும் கேட்காமல் ’என் ரசிகர்கள் என்னை நம்பி, என் திரைப்படத்தில் இருக்கும் உண்மையை நம்பி படம் பார்க்க வருகிறார்கள். டூப் போட்டு நடித்து அவர்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை’ என்று கூறி கமல்ஹாசனே நடித்திருக்கிறார்.

அந்த காட்சி படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் கமல்ஹாசனின் காலில் சிறிய முறிவு ஏற்பட்டிருக்கிறது. காயம் சிறிதென்பதால் விரைவில் குணமாகி கமல்ஹாசன் நன்றாக நடக்க ஆரம்பித்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம்.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசனின் தாடையில் சிறு வெட்டு போன்ற காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. காட்சிகள் உண்மையாக வரவேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் கடுமையாக உழைப்பதோடு மட்டுமல்லாமல், திரைப்படத்தின் ஹீரோயின்களான பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோரையும் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார்.

90% திரைப்படம் படமாக்கப்பட்டுவிட்டதோடு, டப்பிங் வேலைகளும் உடனுக்குடன் நடந்துகொண்டிருப்பதால் வருகிற தீபாவளியன்று படம் ரிலீஸாகலாம் என்று பேசப்படுகிறது.

6 comments:

 1. நல்ல தகவல் படம் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்.நம் சம காலத்தில் இப்படி ஒரு கலைஞனை காணக்கிடைத்தற்கு நாம் மிகவும் பாக்கியம் செய்தவர்களாக/

  ReplyDelete
 2. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நல்ல தகவல்... காத்திருக்கிறேன் திரையில் காண...

  ReplyDelete
 4. முன்னதான வாழ்த்துக்கள் படத்துக்கு...

  ReplyDelete
 5. விஸ்வரூபம் -2 காத்திருக்கிறேன்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...