கடந்த சில மாதங்களாக தமிழில் வெளியாகும் படங்களுக்கு விமர்சனம் எழுதவேண்டும் என்ற விருப்பம் இருந்தும் அதற்கான சூழல் ஏற்படவில்லை... வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் விடுமுறை இல்லாமல் இருந்துது.
இந்த வாரம் இந்த இருதினங்களும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக தலைவா படத்துக்கு சென்று விமர்சனம் எழுதவேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக தயாராக இருந்தேன்...
ஆனால் பாருங்கள் இந்த விதிவிளையாடி விட்டது... நீங்களும் தப்பித்துவிட்டீர்கள். இருந்தாலும் அப்படியே விடமுடியுமா அதான் இந்த தலைப்போடு இந்த பதிவு...
**************************************
முகநூலில் நான் ரசித்த நகைச்சுவை துணுக்குகள்...
கேபிள் டிவி நிறுவனத்துக்கு சர்தார் வேலை கேட்டு போனார்.. இன்னும் ஒரு ஆளும் வந்திருந்தார்.. ஆனால் இருந்ததோ ஒரே ஒரு வேலை..முதலாளி இருவரில் யார் ஒரே நாளில் அதிகமான கேபிள் கம்பங்களை புதைக்கிறார்களோ அவருக்குதான் அந்த வேலை என்றார்..மாலை இருவரும் களைப்படைந்து திரும்பினார்கள்..
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்.." எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?" அவர் "25 கம்பங்கள்" என்று பதிலளித்தார்.. சர்தாரைக் கேட்க, அவர் "5" என்றார். முதலாளி வியப்படைந்து..
" என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?
" அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு... போய்ப் பாருங்க..!!"
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்.." எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?" அவர் "25 கம்பங்கள்" என்று பதிலளித்தார்.. சர்தாரைக் கேட்க, அவர் "5" என்றார். முதலாளி வியப்படைந்து..
" என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?
" அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு... போய்ப் பாருங்க..!!"
**************************************
நேற்று,
அலுவலகத்தில் இருந்தபோது மனைவியின் தொலைபேசி அழைப்பு.
"என்னங்க?"
"ம்ம்...சொல்லு"
"நம்ம ஏரியாவுல ஒரு மாதர் சங்க கூட்டம் நடக்குது ... நான் போகட்டுமா?
"இதை ஏன் என்கிட்ட கேக்குற?"
"உங்க கிட்ட சொல்லாம நான் எதை செஞ்சிருக்கேன்?"
"சரி..சரி...அழாத... இன்னைக்கு மழை வர்ற மாதிரி இருக்கு ... இன்னைக்கு வேண்டாம் ... அடுத்த முறை போகலாம்"
"அதெல்லாம் முடியாது ... எனக்கு இன்னைக்கு போகணும்"
("அப்புறம் எதுக்கு என்கிட்ட கேட்டே?" அப்படின்னு சொல்ல நினைத்தேன்.. நமக்கு எதுக்கு வம்புன்னு விட்டுட்டேன்"
நான் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்றதும்,
"இன்னைக்கு மாதர் சங்க கூட்டத்துல புதுசா ஏதாவது ஒண்ணு கத்துகிட்டு வந்தியா"ன்னு கேட்க,
அவள் சொன்னாள்,
"புதுசா ஒண்ணும் கத்துக்கல ...உப்பு எப்படி இருக்கும் என்று காட்டினாங்க பார்த்துட்டு வந்தேன்"

****************************
என் 12 வயது மகனோடு பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவன் சொன்னான்,
"அப்பா, இன்னைக்கு எங்க மிஸ் சொல்லிக் கொடுத்ததுல ஒரு சந்தேகம்பா?"
"அப்படியா ... அப்பாகிட்ட சொல்லுடா ... நான் சொல்லிகொடுக்கிறேன்டா என் செல்லம்"
"அப்பா ... கஞ்சன்னா யாருப்பா?"
"பணம் இருந்தும், செலவு செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கும்போதும் செலவழிக்காமல் இருப்பவன் தான் கஞ்சன் .. யார் கண்லயும் காசையே காட்ட மாட்டான் ... குறிப்பா சொல்றதுன்னா கட்டிய மனைவி, பெத்த புள்ளைங்களுக்குக்கூட பத்து பைசா கொடுக்க மாட்டான் ... அப்படிப்பட்டவன் பேருதாண்டா கஞ்சன் "
சற்றும் தாமதிக்காமல் அவன் கேட்டான்,
"அப்பா, இன்னும் ஒரு சந்தேகம்"
"சொல்லுடா ... "
"அப்பா ... பணம், காசு, பைசான்னு சொன்னீங்களே ... அப்படின்னா என்னா??"
**************************************
எதுவும் சுலபமில்லை!
ஆனாலும் எல்லாமே சாத்தியம் தான்!!
- ஹிட்லர்
ஆனாலும் எல்லாமே சாத்தியம் தான்!!
- ஹிட்லர்
உப்புச் சப்பில்லாம கூடுற கூட்டமின்னு சொல்லிடக் கூடாதுல்ல... அதான் உப்பைக் காட்டியிருப்பாங்க...
ReplyDeleteபையனின் கேள்வி தூள்...
சர்தார் சுவை...
தலைவா... அம்மாவுக்கு 'வி' என்றாலே அலர்ஜியோ?
பையனின் கேள்வி அருமை
ReplyDeleteகடைச் ஜோக் நன்றாக இருந்தது
ReplyDeleteவழக்கமா மூணு ஓட்டு பட்டையிலும் ஓட்டு போடுவேன், இம்முறை தமிழ்மணம் போடவில்லை.......... ஒரு மைனஸ் ஓட்டு இருப்பதால்.......சாரி............
ReplyDeleteதலைவா விமர்சனம் எங்கங்க....
ReplyDelete