நண்பரோடு பேசிக்கொண்டே நடக்கையில்
எதிர்படுகிறது ஒரு தேனீர் கடை...!
தேநீர் அருந்தும் நோக்கோடு
பார்த்துக்கொள்கிறோம்
ஒருவரை ஒருவர்...!
உண்மையில் அப்போது
என் பையில் பணமில்லை...
நண்பரிடம் சொல்லி பிரிகிறேன்
எனக்கு தேநீர் குடிக்கும் பழக்கம்
இல்லையென்று...!
எனக்கும் பழக்கும் இல்லை என்று
பிரிகிறார் நண்பர்...
ஒருவேளை அவரிடமும்
இதே நிலையோ...!
எப்போதும்...
//எப்போதும்...
ReplyDeleteபணம் இல்லாத வாழ்க்கை
சங்கடத்துடனே நகர்கிறது...!
//
உண்மை தான்.
அனைவருக்கும் எப்போதேனும் நேர்ந்துவிடுகிற
ReplyDeleteநிகழ்வுதான் இது.இறுதி வரிகள் அற்புதம்
தொடர வாழ்த்துக்கள்
ஒரு பத்து ரூபா கூட பாக்கட்ல இல்லாம ஏன் வெளில கிளம்புறீங்க?!
ReplyDeleteஎப்போதும்...
ReplyDeleteபணம் இல்லாத வாழ்க்கை
சங்கடத்துடனே நகர்கிறது...!
அருமை... நச்சென்று உண்மையை உணர்த்தும் நல்ல கவிதை
ரைட்டு.
ReplyDeleteஎல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்தான் வாத்தியாரே!
ReplyDelete