சில நேரங்களில் இப்படித்தான்
அவள் சிந்திவிட்டு போகும்
சிரிப்புபொளிகளை சேகரித்து
அர்த்தம் தேடிப்பாக்கிறேன்...
அதில் காதல் இருக்கிறதா
இல்லையா என்ற குழப்பத்தோடே
கலைந்து விடுகிறது அவைகள்...
நாம் காதலை சொல்லி
அவளின் உதட்டோரத்தில்
ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகையும்
உதிர்ந்து விடுமோ என்ற தயக்கத்தோடே
என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது விநாடிகள்...
வீடும் நாடும்
காவியமும் ஓவியமும்
காதலை மரணபயத்தோடே முடிக்கிறது...
சொல்லாமல் உணர்வற்று கிட்ப்பதை விட
சொல்லிவிடுவதாய் முடிவெடுக்கிறது
என் உயிர் அணுக்கள்...
கடிதம் கொடுக்க
கிழிந்த சாலைகளுக்கிடையே கடக்கும்
அவளை எதிர்நோக்கும் போது
பூனையின் குறுக்கீடலால்
வீடு திரும்பி நாளை கொடுக்கலாம்
என்று தன்னோடே வைத்துக் கொள்கிறேன்...
எப்போது தரலாம் என்று
சரிவராத முடிவை யோசிக்கையில்
பல்லியின் சப்தத்தால் அதுவும் ஸ்தம்பித்தது..
இப்படியாக
என் காதலுக்கு தடங்கலாய் இருக்க
காலையில் இன்னொன்றாய்
பக்கத்து வீட்டுக்காரனின்
காதல் தோல்வி மரணமும்...
நான் எப்படித்தான் முடிவெடுக்க....
மீள் பதிவு
நல்லது... நன்றி...
ReplyDeleteஒவ்வொருவாட்டியும் கூப்பிடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுமாம்...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html
நீரெல்லாம்...?
ReplyDeleteமீள் பதிவாயினும் தூள்பதிவு
ReplyDeleteகொஞ்சம் இல்லை அதிகம்
யோசிக்க வேண்டிய விஷயமிது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha,ma 3
ReplyDeleteஅதுக்காக சொல்லாம யோசிச்சுக்கிட்ட்டே இருந்தா எப்படி?!
ReplyDeleteஅருமை
ReplyDeleteபேசாம அம்மா அப்பா சொல்லுற பிள்ளையைக் கட்டிக் கொண்டு
ReplyDeleteஇதே காதல் உணர்வுகளைப் பகிர மனதைப் பக்குவப் படுத்துங்கள் .
பேயாய் வந்து மீண்டும் எங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க
எனக்குத் தெரிந்த ஒரே ஒரு வழி இது தான் சகோதரா :)))))))))))))
அவளின் உதட்டோரத்தில்
ReplyDeleteஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகையும்//ஆஹா...
கவிதை நல்லாயிருக்கு.
ReplyDelete