கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 August, 2013

கவிதையை மாற்றிய கண்ணதாசனும், அடிப்பட்ட கிளியும்


கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.

************************************
 
 
''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான். அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது. பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.

கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''

9 comments:

  1. நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கவிஞர் கண்ணதாசன் சொன்னது முற்றிலும் உண்மையே

    ReplyDelete
  3. ரசிக்க வைத்தது

    ReplyDelete
  4. நல்ல சிந்தனைக்குரிய பதிவு........நண்பரே

    ReplyDelete
  5. கண்ணதாசன் கவிதை மனம் தொட்ட நிகழ்வு!

    ஸ்பாட் அவுட் ஜெயிலில் கிளி நல்ல நகைச்சுவை!

    ரசித்தேன். வாழ்த்துக்கள் சகோதரரே!

    த ம.5

    ReplyDelete
  6. அட கிளி பிரமாதமாக யோசிக்கிறதே
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உண்மை ஒருநாள் அல்ல உடனே சொல்லிவிட்ட கண்ணதாசனின் பண்பு பாராட்டத்தக்கது

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...