கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 August, 2013

மாணவர்கள் அந்த விஷயத்தில் உஷாராகத்தான் இருக்கிறார்கள்...!


ஒரு புவியியல் பாட ஆசிரியர் மிக கவலையுடன்
புவி வெப்பம் அடைவதை பற்றி மாணவர்களுடன்
கருத்துக்களை பரிமாறிக்கொண்டு இருந்தார் ...!

மாணவன் ஒருவன் எழுந்து சார் ஏன் புவி வெப்பம் அடைகிறது ..? அதன் தாக்கம் என்ன சார் என வினாவினான் ..?

காரணம் :
மரங்களை வெட்டுவதே புவி வெப்பத்துக்கு பிரதான காரணம் என்றார் ....!

தாக்கம் மிகப்பயங்கரமானது ....!

பனி மலைகள் உருகும் ... கடல் நீர் மட்டம் உயரும் நிலங்கள் நீருள் மூழ்கும் மனிதர்கள் விலங்குகள் அழியும்.. புதிய நோய்கள் வரும் ..

என அடுக்கிக் கொண்டே போனார் ...!

மீண்டும் மாணவன் எழுந்து ...

அன்று அன்று ஸ்கூல் லீவுவிடுமா சார் ...???
 

எது எப்படியிருந்தாலும் இவர்களுக்கு லீவு விட்டுடனும் போல....
மாணவர்கள் அந்த விஷயத்தில் உஷாராகத்தான் இருக்கிறார்கள்...! (தலைப்பு)
 

**********************************

விரல்பிடித்து கடைவீதி வந்த மகன், கடையை வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் பிடியை நழுவ விட்டான்.

அப்பா ஒளிந்து கொண்டார்.
அப்பாவைத் தேடினான்.

சிறிது நேரம் கழித்து உதடுகள் பிதுங்க, விசும்பத் தொடங்கிய போது அப்பா வந்து அள்ளிக் கொண்டார்.

மகன் தந்தையை மறந்திருந்தபோது தந்தை ஒளிந்திருந்தார். ஆனால் மகனைக் கண் காணித்துக் கொண்டிருந்தார்.

கடவுளும் அப்படித்தான் நாம் தேடாத போது தென் படுவதில்லை.

ஆனால் நம்மைப் பார்த்துக் கொள்கிறார்...!



பாரும் பார்க்க வில்லை என்று தவறுகள் செய்யாதீர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்...


ரசித்தது....

*********************************************
ள் வர்கு ி்க றி...!

3 comments:

  1. பாம்பும், தும்பியும் படம் அருமை

    ReplyDelete
  2. குழந்தைகளின் மன வெளிப்பாடை மிகவும் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள் சகோ .லீவு விட்டால் போதும் அவர்களுக்குக் கொண்டாட்டம் தான் !!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...