மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்ப்பறவை எங்கோ சென்று இறைதேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பிவந்தபோது திடுக்கிட்டு அலறியது.
ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பது அதன் நோக்கம்.
தாய்ப்பறவையால் அந்தப்பாம்பை என்னசெய்ய முடியும்? பாம்பண்ணா! பாம்பண்ணா! என்று அலறியது.
பாம்பு சட்டை செய்யவில்லை.
பாம்பண்ணா! பாம்பண்ணா! ஒரு நிமிஷம் நான் சொல்றதக் கேளண்ணா! மீண்டும் மீண்டும் தாய்ப்பறவை அலறியது. திரும்பிப்பார்த்த பாம்பு,
ஏன் எதற்காகக் கத்துகிறாய்? என்றது
அண்ணா! நீங்க எவ்வளவு பெரியவங்க! உங்களக் கண்டு பயந்துட்டு இருக்கிற எங்கமேலெ நீங்க இரக்கப்படக் கூடாதா?
அப்படியா?
ஆமாங்க அண்ணா உட்டுடுங்க! நாங்க பொழைச்சுப் போறோம்
நான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுவியா?
சொல்லுங்க அண்ணா!
உன் வாயிலெ என்ன வெச்சிருக்கே?
என் குஞ்சுகளுக்கு கொஞ்சமா இரை கொண்டுவெந்தேன் அண்ணா!
என்னது?
சின்னப் புழுக்கள் அண்ணா!
இப்பச் சொல்லு! நீ ஏன் அந்தப் புழுக்களுக்கு இரக்கங் காட்டலே?
அந்தப்பறவையால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
இதுதான் நமது வாழ்க்கை விதி! உன்னைவிட பலங்குறைந்தது உனக்குத் தீனி! என்னைவிட பலங்குறைந்தது எனக்குத் தீனி! அப்படி இல்லாம வாழ வழி இருக்கிற மனுஷங்களே அப்படி வாழ்றது இல்லே! நம்மாலெ எப்படி வாழமுடியும்? இருந்தாலும் என்னை அண்ணான்னு அன்போடு பலமுறை கூப்பிட்டெ இல்லே, அதனால உனக்கு என்னாலெ எந்த ஆபத்தும் இல்லெ. என் பசிக்கு நான் வேறெ வழி பாத்துக்கிறேன்!
பாம்பு போய்விட்டது. அந்தத் திசையையே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றது தாய்ப்பறவை!

************************
இன்று உலக சாரணர் தினம்....
பள்ளி காலங்கள் மனதிலாடுகிறது...!
பள்ளி காலங்கள் மனதிலாடுகிறது...!
எனது பள்ளி காலத்தில் எங்களை வழிநடத்திய
சாரணர் அணியின் தலைவர்...
எங்களது ஆசிரியர்...
சாரணர் அணியின் தலைவர்...
எங்களது ஆசிரியர்...
இன்று உலக தாய்பால் தினம்....
அருமை நண்பரே.....
ReplyDeleteஎப்படி உள்ளீர்கள் இந்த வருட பதிவர் மாநாட்டு ஏற்பாடுகள் எப்படி உள்ளது
சிந்தனையைத் தூண்டும் கதை நன்று நண்பரே.
ReplyDeleteஆசிரியரை சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅது திருத்தணி மலைக்கோவில்தானே! இன்னிக்கு இரண்டு விசேச தினங்களா?! இப்போதான் தெரிந்தது!! பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமை...
ReplyDeleteநன்று. நம்மால் முடிந்தவரை உயிர்களை கொல்லாமல் இருக்கலாம்.
ReplyDeleteஅனைத்து உயிர்களும் தன் இனத்தையே நியாயம் இல்லாமல் கொல்லாது . கூலிப்படையையும் வைத்திருக்காது. மனிதனுக்கும், மற்ற உயிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
நியாயமான கதை. மனிதர்கள் தான் தவறாகவே பயன்படுத்துகிறார்கள்.
அது மிருகம்.....எளியதை வலியது அடிக்கும் என்கிற கருத்தில் மாற்றம் இல்லை ..எனினும் , மனிதம் என்பது..இதை விட மேலானது ...நமக்கு இந்த கதை தேவை இல்லை என்பது என் கருத்து ....இருந்தாலும் , எளியவரை ஏய்க்கும் மக்கள் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்...என்ன செய்வது.
ReplyDeleteஆசிரியரைச் சிறப்பித்தமைக்குப் பாராட்டுக்கள்
ReplyDeleteஎன்னை அண்ணான்னு அன்போடு பலமுறை கூப்பிட்டெ இல்லே, அதனால உனக்கு என்னாலெ எந்த ஆபத்தும் இல்லெ. //நன்று
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - கதை அருமை - இருவர் செய்வதும் ஓன்று தானென விளக்கிய பாம்பு - அன்பின் காரணமாக அன்ணா என அழைத்தன் காரணமாக விட்டு விட்டுச் சென்றது நன்று - சாரணர் தினம் - தாய்ப்பால் தினம் என்று கணடறிந்து குறுப்பிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete