கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 August, 2011

மங்காத்தா திரைவிமர்சனம் - (mankatha review)


நீண்ட இடைவேளைக்கு பிறகு அதிரடியாக வந்து அஜித் ஆடியிருக்கும் ஆட்டம்தான் மங்காத்தா... இன்றுமுதல் பட்டையை கிளப்ப களம் இறங்கிவிட்டது. இதன் மூலம் தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் அஜித்.

நாட்டில் பரவலாக எல்லா நிலையிலும் இருக்கும் ஒரு விஷயம் சூதாட்டம். மும்பை தாராவியில் இருக்கும் ஒரு சூதாட்ட கிளப்பில் புழக்கத்தில் இருக்கும் பணத்தை குறிவைத்து நடக்கும் கடத்தல் சம்பவம்தான் கதை. படத்தின் பெரும்பாலன காட்சிகள் இரவிலே எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை தாராவியில் ஜெயபிரகாஷ் தன்னுடைய சினிமா தியாட்டரில் ஒரு சூதாட்ட கிளம் நடத்திவருகிறார். அதில் சேர்ந்துள்ள சூதாட்ட பணம் மற்றும் அவருடைய பாட்னர்கள் பணமான ரூபாய் 500 கோடி ரூபாயைபற்றி போலீசுக்கு தகவல் தெரிய அதை அங்கிருந்து வேருஇடத்திற்க்கு மாற்றி மும்பையில் நடக்கும் ஒரு IPL  போட்டி அன்று பிரித்துக் கொள்ள திட்டமிட்டுகிறார்கள்.

ஹைதராபாத்தில் அதிரடியாக சூதாட்டங்களை ஒழித்துவிட்டு தாராவியை மையப்படுத்தி மும்பைக்கு மாற்றப்படுகிறார் சிபிஐ அதிகாரியான அர்ஜூன். இவருடைய ஓப்பனிங் அசத்தலாக இருக்கிறது.

போலிஸிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அஜித் சூதாட்ட கிளம்புகளை சுற்றிக்கொண்டு ஜாலியாக பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறார். ஜெயபிரகாஷின் மகளான திரிஷா தன்னுடைய காதல்வலையில் விழவைத்து அந்த குடும்பத்தில் நல்லவர்போன்று நாடகமாடுகிறார். இறுதியில் இதெல்லாம் சூதாட்ட கிளப்பில் இருக்கும் பணத்தை திருடத்தான் என்று தெரிய வரும்போது படம் சூடுப்பிடிக்கிறது.

அதேவேலையி்ல் ஜெயபிரகாஷிடம் வேலை செய்யும் வைபவ் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களுக்கு உதவியாக சென்னையிலிருந்து  பிரேம்ஜி வரழைக்கப்படுகிறார். அந்தப்பணத்தை இடம் மாற்றும் போது இந்த நால்வரும் சேர்ந்து கொள்ளையடித்து பின் பிரித்துக் கொள்ள திட்டமிட்டுகிறார்கள்.

அஜித் பிரேம்ஜியிடமிருந்து அவர்களின் பிளானை தெரிந்துக் கொண்டு அந்த நால்வருடம் தாமும் இணைத்துக் கொள்கிறார். அஜித்தும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டு அதன்படியே கொள்ளையடிக்கிறார்கள்.

இந்த பணத்தை பிடிக்க வந்திருக்கும் சிபிஐ அதிகாரியான அர்ஜூன் இந்த குருப்பை சுற்றி வலைக்க, மற்றொறுபக்கம் ஜெயபிரகாசின் ஆட்கள் சுற்றி வலைக்க அதற்கடுத்து இந்த 5 பேர்களுக்குள் தனித்தனி திட்டம் தீட்டி பணைத்தை கைமாற்றி என இடைவேளைக்கு பரபரப்புடன் நகருகிறது.

இறுதியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சிபிஐ வசம் வந்ததா அல்லது அஜித் அந்தப்பணத்தை கூட்டாளிகளுடன் பிரித்துக் கொண்டார்களா... என்று கடைசி அரைமணிநேர படத்தில் வெங்கட்பிரபு அசத்தியிருக்கும் படம்தான் மங்காத்தா.

கலக்கல் பாணியில் தல...

போலீஸில் இருந்து சஸ்பென்ட் ஆனபிறகு 40 வயது ஆள் என தன்னைக்காட்டிக் கொண்டு ‌மிக ஜாலி பேர்வழியாக வலம்வருகிறார். திரிஷாவுடன் சுற்றிவிட்டு அவருடைய அப்பாவை நோட்டமிட்டு அதன் பிறகு ஐவராக சேர்ந்து 500 கோடடியை கொள்ளையடிக்க படம் முழுக்க ஓடியிருக்கிறார். 

பணம் கொள்ளையடிக்கப்படும் காட்சிகளில் அஜித் பைக் ஓட்டி அசத்தும் காட்சியும் இருதி காட்சிகளில் கார் ஓட்டி செய்யும் சாகசமும் அட்டகாசம்தான்.  மணி.. மணி... மணி.. என தல சொல்லும் வசனம் நச்...

பணத்தை நண்பருடன் சேர்ந்து பிரேம் அங்கிருந்து அபகரிக்க அஜித்தின் வில்ல முகம் விஸ்வரூபம் எடுக்கிறது. அந்த பணத்தை கண்டுபிடிக்க அஜித் செய்யும் அட்டகாசங்கள் படம் முழுக்க பார்க்க முடிகிறது. சிபிஐயிடம் மாட்டிக் கொண்ட தன்னுடைய கூட்டாளியை விடுவிக்க அஜித் விடும் மிரட்டல் காட்சிகள் சூப்பர்.
இறுதி காட்சிகளில் ஆக்சன் கிங்குடன் தல மோதும் சண்டைக்காட்சிகள் அனல் பறக்கிறது. அர்ஜூனால் சுட்டுக்கொள்ளப்பட்டு அஜித் இறக்க என்று எழுந்தால்  அடுத்த கதைக்கு ரெடியாகி அத்தனைப்பேரையும் சீட்டின் நுனிக்கு கொண்டுவந்து சபாஷ் வாங்குகிறார் இயக்குனர். அஜித் இதில் முழுக்க முழுக்க வில்லத்தனத்தில் கூடவே மேலோட்டமான நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்.

திரிஷா அஜித் ஜோடியா ஒரிரு காட்சிகள் மட்டும் வந்து போகிறார். ஏற்கனவே இந்த ஜோடி நிறைய படம் நடித்திருப்பதால் இயக்குனர் மாத்தியோசித்திருக்கலாம்.

பணத்தை கொள்ளையடிக்க முடிவெடுத்து அதைகொள்ளையடித்து அவர்களுக்குள்ளே மாற்றி மாற்றி அபகரிக்க நினைத்து அத்தனைபேரும் மாண்டுப்போகிறார்கள். இன்னும் இறுதி காட்சிகளில் இருக்கும் அத்தனை நடிகர்களும் சுட்டு கொல்லப்படுகிறார்கள்.

திரிஷா மட்டுமில்லாமல் லட்சுமிராய், அஞ்சலி என நாயகிகள் படத்தில் உள்ளனர். நகைச்சுவையை ராம்ஜியோடு முடித்துக்கொண்டார்கள். சென்னை 28, சரோஜா படத்தில் நடித்த முகங்கள் இதிலும் அதிகஅலவில் தெரிகிறது.

இசையால் அத்தனைப்பாடல்களையும் அசத்தியிருக்கிறார் யுவன். விளையாடு மங்காத்தா, பல்லேலக்கா, மற்றும் இவன் அம்பானி பரம்பரைடா பாடல்கள் தியாட்டரை கலக்குகிறது. ஆடாமல் ஜெயிச்சோமடா என்று அஜித் ஆடும் போது ரசிகர்களால் அமைதிகாக்க முடியவில்லை.

வெகு நாளைக்குபிறகு அஜித் தன்னுடைய பழைய பாணியில் படம் பண்ணியிருக்கிறார். படம் முழுக்க வெங்கட் பிரபுவின் டீம் ஆக்கிரமித்துள்ளது. அர்ஜூன் தன்னுடைய இமேஜை விட்டு இந்த படத்தில் நடித்திருப்பது பாராட்டுக்குறியது அத்துடன் அவருடைய சண்டைக்காட்சிகள் மற்றும் நடிப்பு சூப்பர்.

ஒரு மசாலா கதையை எடுத்துக் கொண்டு தன்னுடைய பாணியில் விருவிருப்பாக படத்தை நகர்த்தி ஜெயித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

மதிப்பெண் மற்றும் எத்தனை நாட்கள் ஓடும் என்று கூற விரும்பவில்லை. ஒரு அஜித் ரசிகனாக இப்படம் வெற்றிப்பெறவே விரும்புகிறேன்.

30 August, 2011

மரண தண்டனையைத்தான் முதலில் தூக்கில் போட வேண்டும்

காந்திய வழியில் நடப்பதாக கூறப்படும் நமது நாட்டில் மரண தண்டனையைத்தான் முதலில் தூக்கில் போட வேண்டும். மூன்று தமிழர்களின் உயிர்களைக் காக்க மீடியாக்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று நக்கீரன் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நிறைவேற்றவிருக்கும் தூக்கு‌த் தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உய‌ர்‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌‌றிஞ‌ர்கள் கயல் என்கிற அங்கையற்கன்னி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா ஆகியோர் சென்னை கோயம்பேடு பேரு‌ந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அவர்களை பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர்.

அதில் பங்கேற்ற நக்கீரன் ஆசிரியர் கோபால் பேசுகையில்,

பொதுவாக நமக்கெல்லாம் இல்லாத தைரியம் இந்த மூன்று பேருக்கும் இருக்கிறது. இதை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். யாராவது ஒரு கல்லெறியனுமே; அந்த கல்லு இந்த மூன்று பேரின் உருவமாக வந்திருக்கிறது. 4வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இது பெரிய விஷயம். ஒரு விடியலை நோக்கி இந்த மூவரும் உண்ணாவிரதம் இருப்பதை தமிழகமே இன்று கவனிக்கிறது. .மரண தண்டனையை தூக்கில் போட வேண்டும். இன்றைக்கு ஜனநாயம் பேசுகிறோம். காந்தியம் பேசுகிறோம். காந்திய முறையில்தான் நாம் சுதந்திரத்தை வாங்கியிருக்கோம் என்று படிக்கிறோம்; சொல்கிறார்கள். காந்திய வழியில்தான் நம் நாடு நடக்கிறது என்கிறார்கள். ஆனால், அரசாங்கம் இன்று மூன்று பேரை காட்டுமிராண்டித்தனமாக தூக்கில் போட்டுத்தான் ஆவேன் என்று தேதியை குறித்திருக்கிறது. நாம் காட்டுமிராண்டிகள்தான் என்று சொல்லாமல் சொல்கின்ற ஒரு நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றோம்.

அன்னா ஹசாரே என்கிற காந்தியவாதி உண்ணாவிரதம் இருக்கிறார். பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை விவாதிக்கிறார்கள். இந்த அளவிற்கு பாராளுமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததற்கு காரணம், மீடியாதான்.

மீடியாவின் முயற்சியால்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. இதனால்தான் மத்திய அரசே பயந்து பாராளுமன்றத்தில் லோக்பால் நிறைவேற்றியிருக்கிறது.

இதே போல், இந்த மூன்று சகோதரிகளின் உண்ணாவிரதத்தை மீடியாக்கள் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். பிரிவினை பார்க்காமல் மீடியாக்கள் இந்த விஷயத்தில் ஒன்றுபடவேண்டும்.

கால அவகாசம் குறைவாக இருப்பதால் இந்த நிமிடத்தில் இருந்து உறுதிமொழி எடுத்து மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் மீடியாக்கள். ஏன் என்றால் விட்டுவிட்டால் பிடிக்க முடியாது.

செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இந்த விவகாரம் ஆகிவிடக்கூடாது. அதனால் அன்னா ஹசாரே மாதிரியான பொதுவான ஒரு நபரை வைத்து போராடவும் வேண்டும்.

தூக்குதண்டனையை தடுப்பதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனிதநேயமிக்க அனைவரையும் ஒன்றினைத்து பெரும் போராட்டமாக ஆரம்பித்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட எழுச்சியால்தான் தூக்குத்தண்டனையை நிறுத்த முடியும்.

மூன்று உயிர்களுக்காக நேற்று ஒரு உயிர் தீக்குளித்து இறந்தது. இப்போது மூன்று உயிர்கள் போராடிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அனைத்து பத்திரிகை முதலாளிகளையும் சந்தித்து இந்த போராட்டத்தை மக்களிடையே பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று கெஞ்சிக்கேட்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

நான்காவது நாளாக இந்த பெண்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். இந்த உண்ணாநோன்பு, வெற்றி பெற்ற உண்ணா நோன்பாக முடியும் என்று நம்புகிறேன் என்றார் நக்கீரன் கோபால்.

29 August, 2011

இந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...!



தயதுடிப்பில் தொடங்கி
பேரண்டத்தின் பெரும்பகுதி வரை
நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது
சப்தங்கள்...!

சில சப்தங்களை தின்று
இசையாய் உமிழ்கிறது உலகம்...

ற்கால மனிதனின் சுவடுகள்
இன்னும் ஒட்டிக்கொண்டிருந்திருக்கும்
நாம் இசையால் செதுக்கப்படாமல் இருந்திருந்தால்...
kavithaiveedhi.blogspot.com
ழு  ஸ்வரங்களை வைத்துக்கொண்டு
ஏழு கோடி ராகங்களை
உற்பத்திசெய்தாயிற்று....

வீணையென மீட்டும் 
நரம்புகளின் ஓசை
என் நரம்புகளையும் தட்டிப்பார்க்கும்...

குழலில் குதித்து 
வெளியேறிய காற்று என் குதூகலத்தின் 
வாசல் வரை வந்திருக்கும்...

ப்புத்தப்பாய் அடித்தாலும்
தப்புக்கு தாளமிடால் அமைதிகாத்ததில்லை
என் கால்கள்...

னால் இவை எதுவும்
என் செவியில் நுழைந்து
என் மூளையில் மூகாமிட்டு
என் இதயத்தில் இறங்கி
என் மனதுக்குள் மலர்ந்து
என்னை பரவசப்படுத்தியதில்லை...!

ன் குழந்தையின் 
மழலைச் சொல்லைப்போல....


குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
(மக்கட்‌பேறு குறள் 66)


பொருள் :
 தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

27 August, 2011

சூப்பர் ஹுரோ கதை வேலாயுதம்... விஜய் பரபரப்பு பேட்டி (velayutham)



ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை (28.08.11) மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் "வேலாயுதம்" படம் பற்றியும், இசை வெளியீட்டு விழா குறித்தும், ரசிகர்களுக்கு விஜய் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் ரொம்ப நாளாக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிற படம் "வேலாயுதம்". இப்படத்தை ரசிகர்களை கொண்டுதான் ஆரம்பித்தோம். அதுபோல் ஆடியோ ரிலீசையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த விரும்பினோம். அதற்காக நானும் தயாரிப்பாளர், டைரக்டர் ராஜா எல்லாரும் யோசித்தோம். ரசிகர்கள் மத்தியில் என்கிறபோது சரியான இடம் தேவை. எனக்கு எல்லாமே ரசிகர்களாகிய நீங்கள் தான். என் எல்லா காரியங்களிலும் நீங்கள் தான் கூட இருக்க வேண்டும். உங்கள் முன்னாடி தான் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் நடக்க வேண்டும். அப்படி யோசித்த போதுதான் வேலாயுதம் ஆடியோவை மதுரையில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். நாளை 28ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.


இந்த படத்தைபற்றி கேட்டால், எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி எனக்கும் ஆசை இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் வேலாயுதம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமும் இந்தபடத்தில் இருக்கு. படத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும். வேலாயுதம் படத்தின் கதை பற்றி ராஜா சொல்ல வந்தபோது, படத்தின் கதைகேட்டு மிகவும் பிடித்து போனது. மேலும் படத்தில் அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால், உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். படமும் ரொம்ப அழகாக வந்திருக்கிறது.


படத்தில் முக்கியமான விஷயம் ரயில் சண்டைக்காட்சி. இப்படிபட்ட சண்டைக்காட்சியில் நடிக்க ரொம்ப நாளா ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும். இந்த ரயில் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து சண்டைக்காட்சியை படமாக்கினோம். அதுஒரு புதிய அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்தது படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பற்றி சொல்ல வேண்டும். விஜய் ஆண்டனியை பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே தெரியும். அதேபோல் வேலாயுதமும், வேட்டைக்காரனை காட்டிலும் பலமடங்கு வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா...? படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும், எல்லாவற்றிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை ஏதாவது இருக்கும். அதுதான் நீண்டகாலம் நிலைக்கும் என்கிற எண்ணம் அவருக்கு உண்டு.


ரசிகர்களிடம் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்.

மொத்தத்தில் "வேலாயுதம்" படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.

இவ்வாறு விஜய் கூறினார்.

26 August, 2011

இந்த மனைவிகளே இப்படித்தான்.... சில சமயங்களில்...

வளுக்காகவே
‌செடியில் பூக்கள் பூக்கிறது
சிலசமயம் நிலவுகளும்...!  
kavithaiveedhi.blogspot.com
வள் நடக்கையில்
பூக்களை தூவுகிறது பூமரங்கள்
சிலசமயம் இலைகளை...!
 
திகாலை விடியலில் பிரகாசிக்கும் 
அவளின் முகம்
சிலசமயம் சூரியன்...!
 
  ருடும் தென்றலாய்
அவளின் பார்வைகள்
சிலசமயம் புயலாய்...!

கூர்மையான விழிகளால்
‌அதிகம் பேசுவாள்
சிலசமயம் மொழிகளால்...!

ன் கவிதைகளுக்கு
அவள்தான் கருப்பொருள்
சிலசமயம் தமிழ்...!
  
தினமும் அவளுக்காகவே
சுவாசிக்கிறேன்
சிலசமயம் எனக்காகவும்...!



 வளின் புன்னகைகள்
புதிராகவே இருக்கும்
சிலசமயம் அழுகைகள்...!


கிழ்ச்சியும் சந்தோஷமும்
எங்களின் துணைகள்
சிலசமயம் ஊடல்கள்...!

நான் சிந்தும்
வியர்வையும் கண்ணீரும் அவளுக்காகவே
சிலசமயம் உதிரங்கள்...!


னைவியாய் அவளை
நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
சிலசமயம் தாயாய்...!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

23 August, 2011

தமிழ் புத்தாண்டு..! தமிழக அரசு அதிரடி மாற்றம்...



சித்திரை மாதம் முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வகை செய்யும் மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு' என்ற நடைமுறையை ரத்து செய்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மூலம், ஏற்கெனவே இருந்த வழக்கத்தின்படி, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு வகை செய்யப்படுகிறது.
இந்த மசோதாவை சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதன் தாக்கல் செய்தார். 2011-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) நீக்க சட்ட முன்வடிவின் விவரம்:

2008-ம் ஆண்டு தமிழ் நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டமானது தமிழ் திங்களான தைத் திங்கள் முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும் என்று கூறுகிறது.

பொதுமக்களும், தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர்களும், வானியல் வல்லுனர்களும், மற்றும் பல்வேறுபட்ட துறைகளில் உள்ள அறிஞர்களும் 2008-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு சட்டமானது தமிழ் திங்களான சித்திரை திங்களின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடிவரும் வழக்க நடைமுறைக்கு மாறாக உள்ளது என்று கருத்துக்கூறி உள்ளனர்.

 தங்களது கருத்துக்களை வெவ்வேறு ஊடகங்களின் வாயிலாகவும் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் மேற்சொன்ன சட்டத்தை நீக்கம் செய்யுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்த் திங்களான சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடும் பழமை வாய்ந்த வழக்கத்தை மீட்டுத் தருமாறும் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே, மேற்சொன்ன சட்டமானது தமிழ் திங்களான தைத்திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பின்பற்றுவதை பொறுத்த அளவில் பொதுமக்களிடையே நடைமுறை இடர்பாடுகள், தடை, எதிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி உள்ளது. 
 
எனவே தமிழ் திங்களான சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் காலத்தால் முந்தைய வழக்கத்தை மேற்கொள்ள சட்டத்தை நீக்கம் செய்வதன் மூலம் மீட்டளிக்க முடிவு செய்துள்ளது.
இந்த சட்ட முன்வடிவு, மேற்காணும் முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விளைகிறது," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இந்த மசோதா விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
ஆளாளுக்கு மாத்திக்கிட்டு இருங்க உண்மையான தமிழ்ப்புத்தாண்டு எப்பொழுது என்று தமிழ்களுக்கு மறந்துப்போக போகிறது..

20 August, 2011

மங்காத்தாவால் பெருத்த அவமானம்... தல-யின் கலங்க வைக்கும் அறிக்கை...


அஜித் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் தான் மங்காத்தா. ஆனால் இந்த பதிவு அதைப்பற்றியல்ல என்று தெளிவாக முதலில் சொல்லிவிடுகிறேன்.


எங்கள் ஊரில் சில இளைஞர்களும், ஆண்களும் வேலைவெட்டிக்கு செல்லாமல் எப்போதும் அருகே இருக்கும் ஏரிக்கரையோரம் உள்ள முள்காட்டில் அமர்ந்து காலை முதல் மாலை வரை தொ்டர்ந்து மங்காத்தா ஆடிக்கொண்டிருந்தார்கள்.

இது குறித்து பெண்கள் மிகவும் கவலையடைந்து வந்தார்கள். வேலைக்கு செல்லாமல் இப்படி மங்காத்தா ஆடுகிறிர்களே என அவர்களது கணவர்களிடம் கேட்டும் அதற்க்கெல்லாம் அவர்கள் காது கொடுத்து கேட்பதாக இல்லை தொடர்ந்து மங்காத்தா எனும் சீட்டாட்டத்தை தொடர்ந்து ஆடிவந்தார்கள்.

பொறுத்துக்கொள்ள முடியாத எங்க ஊர் பெண்கள் எங்க ஊர் தலையிடம் (எங்க ஊர் தலைவரைத்தான் நாங்க தல-ன்னு கூப்பிடுவோம்) முறையிட்டார்கள்.

இது குறித்து உடனடியாக முடிவுகட்ட நினைத்த தல விரைவாக மங்காத்தா ஆடும் இடத்திற்க்‌கே சென்று அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லி அவர்களிடம் இனி மங்காத்தா ஆடக்கூடாது என கட்டளையிட்டார். மேலும் இப்படி வேலை வெட்டிக்கு போகலால் வாழ்க்கையை வீணடித்து விடுகிறீர்களே என கண்கலங்கி அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தர்.


இனி ஆடமாட்டோம் என அவர்களும் உறுதியளித்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

அம்புட்டுத்தான்..

இப்படி உங்க ஊரிலும் ஏதாவது தல மேட்டர் இருந்தா அப்படியே சொல்லுங்க...

19 August, 2011

நித்தியானந்தா மீது செகஸ் புகார்கள் சென்னையில் சிபிசிடி போலீஸார் அதிரடி விசாரணை

சாமியார் நித்தியானந்தாவிடம் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து திடீர் விசாரணை நடத்தப்பட்டது.

நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். ஒரு மாத கால தலைமறைவுக்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து நித்தியானந்தாவை கர்நாடக சிஐடி போலீஸார் கைது செய்து பெங்களூர் கொண்டு வந்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடப்பட்டார். தற்போது நித்தியானந்தா மீதான வழக்குகள் ராம்நகர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நித்தியானந்தா மீது இந்து மக்கள் கட்சி, அவரது முன்னாள் சீடர்கள் சென்னை மத்திய குற்றப் பிரிவு, பாண்டி பஜார் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். அதில் இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக இந்து மக்கள் கட்சியும், தங்களை மிரட்டுவதாக முன்னாள் சீடர்களும் கூறியுள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அவர்களின் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தாவை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். இதையடுத்து நேற்று கிண்டியில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு வக்கீல்களுடன் வந்தார் நித்தியானந்தா.

அங்கு பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் நித்தியானந்தா மீதான புகார்கள் குறித்து போலீஸார் கேட்டதாக தெரிகிறது.

திருவண்ணாமலையில் சாமி தரிசனம்

இதற்கிடையே, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மேலாளர் இந்திரஜித் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. இதற்காக நித்யானந்தாவுக்கு அழைப்பு அனுப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நித்யானந்தா திருமணத்தில் கலந்து கொண்டார். நித்யானந்தா வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும், அதிகாலை நேரத்தில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றும் அவர் சாமி கும்பிட்டார்.

18 August, 2011

தடம்மாறி போகிறது... நம் தேசத்தின் அறப்போர்...

இந்தியாவில் பிரபலமடைய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களால்  கண்டறியப்பட்ட தற்போதை புதிய வழிதான் உண்ணாவிரதம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முழு பலத்தை அரங்கேற்றியப்பிறகு, எதிர்த்து கேட்க இனி இந்தியாவில் யாரும் இருக்ககூடாது என்று எண்ணிய காலத்தில்,  புதிய  ஆயுதங்கள் கண்டுப்பிடிப்புகள் காரணமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய போர் முறைகள் நம்முடையதை விட படுபயங்கரமானதாக இருந்தது. அதற்க்கெல்லாம் மேலானதாக ஒரு போர்முறை இருக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கண்டுப்பிடிக்கப்பட்ட நவீன ஆயுதம்தான் “அஹிம்சை” என்கிற “அறப்போர்“

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்து தன்னை சுதந்திர போராட்டத்தில் இணைத்துக்கொண்டப்பிறகு தன்னுடைய புதிய அறவழிப்போராட்டமான உண்ணாவிரதத்தை 1917-ல் பீகாரில் சம்ப்ரான் என்ற இடத்தில், ஜரோப்பிய அவுரிச்செடி பண்ணையர்களுக்கெதிராக ஒரு போராட்டத்தை அறிவித்து அங்குதான் “சத்தியாகிரகம்” வழியில் முதன்முதலாக உண்ணாவிரதம் என்ற மிகப்பெரிய போர் முறையை அறங்கேற்றினார்.

நாம் துப்பாக்கி தூக்கியிருந்தால் ‌ஆங்கிலேயன் பீரங்கி தூக்கியிருப்பான், நாம் பீரங்கி பயன்படுத்தியிருந்தால் அவர்கள் அதை விட பயங்கரமான ஆயுதத்தை எடுத்திருப்பார்கள்.  நாம் பயன்படுத்தியதோ அஹிம்சை அஹிம்சைக்கு எதிராக எந்த ஆயுதத்தை பயன்படுத்துவது என்று தெரியாமல் விழிப்பிதுங்கிய ஆங்கிலேயன் நம் நாட்டைவிட்டே ஓடிவிட்டான்.

நல்ல நோக்கத்திற்க்காகவும், கண்டிப்பாக பலன் அளிப்பதாகவும், போர்முறையின் உச்சக்கட்ட ஆயுதமாகவும் இருந்த அஹிம்சைப்போரான உண்ணாவிரதம் இன்று தடம்மாறிப் சென்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டில் எதற்க்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற நிலைக்கு இன்று நாடு வந்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உண்ணாவிரதம் மேற்க்கொண்ட ‌விதம் அந்த பிரச்சனைகளை முடித்து வைப்பதாக இருந்தது. இறுதிக்கட்ட ‌ஆயுதமாக இருந்த இப்போராட்டம் தற்போது முதற்கட்ட ஆயுதமாக உறுமாறிவிட்டது. ‌ எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற போக்கால் அந்த உண்ணாவிரதம் என்ற வார்த்தை கலையிழந்துப்போயிருக்கிறது.

 20 நாட்கள் 30 நாட்கள் கூட உண்ணா‌நோம்பிருந்து தலைவர்கள் நாட்டின் பிரச்சனைக்காக போராடினார்கள். ஆனால் தற்போது 2 மணிநேரம்  3 மணிநேரம் கூட  இப்போராட்டம் அரங்கேருகிறது. தற்போதைய அரசியல் வாதிகளுக்கு இது தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்க்காக இப்போராட்‌டத்தை தற்போது பயன்படுத்திக் கொண்டுவருகிறார்கள்.

டெல்லியில் சமீப காலத்தில் கருப்பு பணம், லோக்பால் போன்ற பிரச்சனையை மையப்படுத்தி ராம்தேவ், அன்னா ஹசாரே, போன்றோரும், ஆந்திராவில் தெலுங்கான பிரச்சனையை மையப்படுத்தியும், தமி‌ழகத்தில் இலங்கைப்பிரச்சனை, காவிரிப்பிரச்சனைகளை முன்வைத்தும் அதிரடியாய் உண்ணாவிரதம் ஆரம்பித்து தன்னுடைய பிரபலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.
லோக்பால் சரியில்லை என இந்திய பாராளுமன்றத்தையே அவமதிப்பதுபோன்று அன்னா ஹசாரே அவர்கள் நேற்று (17-08-2011) தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை  ஆரம்பித்து கைதும் செய்யப்பட்டார். இது வெற்றிப்பெறுமா அல்லது தோல்வியுறுமா என்று எனக்கு தெரியவில்லை. அவருடைய எண்ணம் சரியானதாகவும், கொண்ட போராட்டத்தில் இருந்து விலகாதவரை இப்போர் நன்மையிலே முடியும்.

உலகமே பார்த்து வியந்த ஒரு அறப்போரை கௌவரப்படுத்தி  காப்பது நாம் ஒவ்வோருவருடைய கடமையாகும். அப்போது தான் உலக அளவில் தன்னை தனித்துவம் கொண்ட நாடாக அடையாளப்படுத்திக் கொண்டுருக்கும், உலகின் சுருக்கமான இந்தியா  தன் கிரீடத்தை கழட்டாமல் இருக்கும்.

16 August, 2011

எவ்வளவு மறைத்தும் மறைக்கமுடியவில்லை..


காலையில் சீக்கிரம் எழுந்து விடுகிறேன்
என்ன ஆச்சரியம் என்று 
சந்தேகத்துடன் பார்க்கிறாள் என் தங்கை...

நான் பலமுறை தலை சீவுவதை
சந்தேகப்பட்டு பார்த்துவிட்டு செல்கிறான்
என் அண்ணன்...

ன் ஆடை அழகேறியதில்
சந்தேகங்கள் ஊராருக்கு...

நான் எதை கிறுக்கினாலும்
கவிதை என்று சொல்லி விடுகிறார்கள்
நண்பர்கள் வட்டத்தில்...

ரவில் குரல் கொடுத்து
இன்னும் தூங்கவில்லையா என்கிறார் அம்மா
நான் தூங்குவதுபோல் நடிப்பது 
தெரிந்துவிட்டது என்அம்மாவுக்கு...

ப்பா குரல் கொடுத்தும் கவனிக்காமல் 
விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஏதோ அசரீரி அழைத்ததாய் நினைத்து...

திர்படுபவர்களை கவனிக்க மறந்து
அதற்காக பலகாரணங்கள் 
சொல்ல வேண்டியிருக்கிறது...

மைகளை மூடினாலும் எட்டிப்பார்க்கிறது
கண்களுக்குள் இருக்கும் கனவுகள்...
கவிதைவீதி
டை, உடை, பாவனை மாறிவிட்டது 
இருந்தும் மாறாதது போல் 
நடிக்க வேண்டியிருக்கிறது...

னி என்ன செய்ய...
எவ்வளவு மறைத்தும் மறைக்கமுடியவில்லை 
எனக்குள் வந்துவிட்ட காதலை....


கருத்திடுங்கள்... வாக்கிடுங்கள்...
கவிதை உயிர்க்கொள்ளும்....

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

15 August, 2011

பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக....

...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.













.
.
.
.
.
.
..
.
.
.
.

13 August, 2011

இந்தியா 64: தேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை


விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் சுதந்திர உணர்வை வளர்த்ததிலும் சரி, விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் தேசபக்தியை மக்கள் மனதில் அழுத்தமாக விதைத்ததிலும் சரி... சினிமாவின் பங்களிப்பு மறுக்கமுடியாதது.

தெற்கு வடக்கு என்ற பேதங்களைத் தாண்டி இந்த விஷயத்தில் படைப்பாளிகள் மிகச் சிறந்த பணியைச் செய்தனர். பொழுதுபோக்கு என்ற பெயரில் தேசத்தின் உணர்வு மழுங்கிக் கொண்டிருக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு தேசபக்திப் படம் வெளியாகி, நாம் இந்தியர் என்ற நினைப்பை நிலைநிறுத்திவிடும். ஷாஹீத் முதல் சக்தே வரை இந்த போக்கைக் காணலாம்.

சுதந்திர இந்தியா தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில், அந்த தேசபக்திப் படங்களைப் பற்றிய ஒரு பின்னோக்குப் பார்வை...

ஷாஹீத் (1948)

நாடு விடுதலையடைந்த பிறகு வந்த படங்களில் மிக முக்கியமானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சுருக்கமான வரலாற்றுப்பதிவு இந்தப் படம். திலீப் குமார், காமினி கௌஷல் நடித்திருந்தனர். பல தேசபக்திப் படங்கள் உருவாக ஒரு அடித்தளமாக இந்தப் படம் திகழ்ந்தது என்றால் மிகையல்ல.

மதர் இந்தியா (1957)

நாடுதான் முக்கியம்... மகனா தாய் நாடா என்று வந்தால் மகனைக் கொல்லக் கூட தயங்காத ஒரு உதாரணத் தாயின் கதைதான் மதர் இந்தியா. கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு மட்டுமல்ல, கிராம வாழ்க்கைதான் இந்த தேசத்தின் கலாச்சார அடையாளம் என்பதை அத்தனை அழகாக படம்பிடித்திருந்தார்கள் இந்தப் படத்தில். மெஹபூப்கான் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தில் நர்கீஸ், சுனில் தத், ராஜேந்திரகுமார், ராஜ் குமார் என பல ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். இசைமேதை நௌஷத் இசையமைத்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் வசூலில் பெரும் புரட்சி செய்த படம் இது. ஒரு வருடத்துக்குமேல் ஓடியது.

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

 இந்திய சினிமா என்பது இந்தி சினிமா மட்டுமல்ல என்ற உண்மையை உரத்துச் சொன்ன படம் வீரபாண்டிய கட்டபொம்மன். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான முதல் கலகக் குரல் கொடுத்த தமிழ் மன்னன் வீரபாண்டிய கட்டமொம்மனின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கட்டபொம்மனாக வாழ்ந்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சொல்லப் போனால் கட்டபொம்மன் எப்படியிருந்திருப்பார் என்றே தெரியாத இந்த தேசத்துக்கு, அந்த வரலாற்றுப் பாத்திரத்தை தன் முகம் மூலம் பதிய வைத்தவர் நடிகர் திலகம்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்ரோ உலகப் பட விழாவில் பங்கேற்று விருது பெற்ற திரைப்படம். நிகரற்ற கலைஞரான சிவாஜி கணேசனுக்கு முதல் சர்வதேச அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுத்தந்தது.

தமிழர் நெஞ்சங்களை விட்டு நீங்காத இந்தப் படம், இன்றைக்குப் பார்த்தாலும் உணர்ச்சி ததும்ப வைக்கும். இந்த காவியத்தைப் படைத்தவர் பிஆர் பந்துலு. இசை ஜி ராமநாதன். இந்தப் படத்தின் சிறப்பு அற்புதமான வசனங்கள். அவற்றைப் படைத்தவர் சக்தி கிருஷ்ணசாமி.

கப்பலோட்டிய தமிழன் (1961)

பிஆர் பந்துலு - நடிகர் திலகம் கூட்டணியில் வந்த இன்னுமொரு காவியம் கப்பலோட்டிய தமிழன். தென் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.


ஒரு நிஜ ஹீரோவின் உணர்ச்சிமயமான வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் நடிகர் திலகம். இந்திய சினிமாவின் ஒப்பற்ற படங்களின் வரிசையில் இடம்பெறத் தேவையான அனைத்து தகுதிகளும் நிறைந்த இந்தப் படத்தில், மகாகவி பாரதியின் பாடல்களை அத்தனை அழகாக இடம்பெறச் செய்திருந்தார் இயக்குநர் பந்துலு.

ஹகீகத் (1964)

தர்மேந்திரா - ப்ரியா ராஜ்வன்ஷ், சஞ்சய் கான் நடித்த இந்தப் படம் இந்திய - சீனப் போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அன்றைய இந்திய அரசு இந்தப் படத்துக்கு ஆதரவளித்தது. இந்தப் படத்தில் மதன் மோகனின் இசை பெரிதும் பேசப்பட்டது. வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம்.

கிராந்தி (1981)

திலீப் குமார், மனோஜ்குமார், சசி கபூர், சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படத்தை மனோஜ்குமார் தயாரித்து இயக்கினார். பிரிட்டிஷ் இந்தியாவில் 1825 முதல் 1875 காலகட்டம் வரை நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வுகள்தான் இந்தப் படம். மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருந்தது. வசூல் ரீதியிலும் பெரிய வெற்றிப் படம் இது.

பார்டர் (1997)

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பெரிதும் பரிச்சயமான ப்ளாக்பஸ்டர் படங்களுள் ஒன்று பார்டர். 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், பூஜா பட் நடித்திருந்தனர். ஜேபி தத்தா இயக்கி பார்டர், தேசபக்திப் பட வரிசையில் மிக உன்னதமான இடத்தைப் பெற்றது.

லகான் (2001)

மிகச் சிறந்த தேச பக்திப் படம் என்று போற்றப்படும் படம் அமீர்கான் நடித்து தயாரித்த லகான். பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு கிராமத்து மக்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட அநியாய வரியை கிரிக்கெட் மூலம் தகர்த்த கதை இது. ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ரூ 25 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ 57 கோடியை வசூலித்துக் கொடுத்தது. தேச பக்திப் படங்களுக்கு மீண்டும் உயிர் தந்த படம் இது. அசுதோஷ் கோவாரிகர் இயக்கியிருந்தார்.

ஸ்வதேஸ் (2004)

ஷாரூக்கானை வைத்து அசுதோஷ் கோவாரிகர் தந்த இன்னொரு தேசபக்திப் படம் இது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஆனால் ஏன் இந்தியாவால் ஒளிர முடியவில்லை? என்ற ஒற்றை வரி கேள்விதான் படத்தின் மையக்கரு. ரூ 20 கோடியில் உருவாக்கப்பட்டது. ரூ 70 கோடி வரை வசூலித்தது.

மிக அற்புதமான படங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது ஸ்வதேஸ். ஏஆர் ரஹ்மானின் இசை இன்னுமொரு ப்ளஸ் இந்தப் படத்துக்கு.

ரங் தே பசந்தி (2006)

ஷாரூ ரங் தே பசந்தி படம் ஜனவரி 26,2006 ஆம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் திரைப்படமாகும்.கோல்டன் குலோப் விருதிற்காக ஜூலை 6,2006 ஆம் ஆண்டும் மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர் தனது பாட்டனார் டைரியில் குறிப்பிட்டிருந்தது போன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி விபரணப்படம் எடுப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தருகின்றார். அங்கு இவரின் தோழியாகப் பழகும் சோனியா (சோகா அலி கான்) மூலம் இவரின் திரைப்படத்தில் நடிப்பதற்குத் தேவையான கதாபாத்திரங்களாக டல்ஜீத் (அமீர் கான்) கரன் சிங்கனியா (சித்தார்த்),அஸ்லாம் (குனால் கபூர்),மற்றும் சுகி (ஷர்மான் ஜோஷி) போன்றவர்களை அறிந்துகொள்கின்றார்.ஆரம்பத்தில் இதனை மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஒப்பும் கொள்கின்றனர்.இவர்களைத் தொடர்ந்து அரசியல்வாதியாக விளங்கும் லக்ஸ்மன் பாண்டே (அதுல் குல்கர்னி)யும் சேர்ந்து கொள்கின்றார்.இவ்விபரணப் படத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று உண்மைகளை அறியும் இவர்கள் இந்தியாவிற்கு உதவி புரிவதில் தீவிரம் அடைகின்றனர். இதனைத் தொடர்ந்து சோனியாவின் கணவரான விமான ஓட்டுநரான அஜெய் (மாதவன்) விபத்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்தன. இச்செய்தி பின்னர் அரசியல்வாதிகளின் பொய்யான கூற்றென்பதனை அறியும் இவரின் நண்பர்கள் அமைதி முறையில் போராடுகின்றனர். இதனைப் பொருட்படுத்தாது  இருக்கும் இந்திய அரசியல்வாதிகளை வன்முறை மூலம் அணுக ஆரம்பிக்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டனரா  என்று அழகாக சொல்லியிருக்கிறது இப்படம். (நன்றி விக்கிபீடியா)

சக்தே இந்தியா (2007)

யாஷ் சோப்ரா தயாரிப்பில் ஷிமித் அமின் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான சக்தே இந்தியா, தேசிய ஒற்றுமையின் அவசியத்தை ஹாக்கி என்ற விளையாட்டு மூலம் உணர வைத்த அருமையான படம். மிகப் பெரிய விஷயத்தை மிக அழகாக எளிமையாகச் சொல்லி உணர்ச்சி வசப்பட வைத்தார்கள்.


இந்தப் படத்தின் ஒரு காட்சியில், ஹாக்கி அணிக்கு தேர்வு பெறும் வீராங்கனைகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் நான் டெல்லி, நான் ஹரியானா, நான் ஆந்திரா என்று தன்னை பிரகடனப்படுத்தும்போது, அத்தனை பேரையும் தகுதியற்றவர்களாக அறிவிக்கும் ஷாரூக்கான், அணியின் ஒரு பெண் மட்டும் தன்னை இந்தியா என்று பிரதிநிதித்துவப்படுத்த, அத்தனை பேரும் தங்கள் தவறைப் புரிந்து கொண்டு தங்களையும் இந்தியா சார்பில் விளையாட வந்திருப்பதாக கூறுவார்கள். அந்தக் காட்சியில் படம் பார்த்த அத்தனை பேருமே கண்ணீருடன் எழுந்து நின்று கைதட்டிய காட்சியை... டெல்லியிலோ, மும்பையிலோ அல்ல... திருப்பத்தூர் என்ற இரண்டாம் கட்ட நகர திரையரங்கில் பார்க்க முடிந்தது!

இந்தப் படங்கள் என்றில்லை. இன்னும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி போன்ற மொழிகளிலும் எண்ணற்ற தேசபக்திப் படங்கள் வந்தன, வந்து கொண்டுள்ளன. மலையாளத்தில் வெளியான கீர்த்திசக்ரா மறக்கமுடியாதது.  (நன்றி தட்ஸ் தமிழ் மற்றும் கூகுள் இ‌மேஜ்)

ஐவி சசியின் 1921, தெலுங்கில் வெளியான அல்லூரி சீதாராமராஜூ, தமிழில் கிட்டூர் ராணி சின்னம்மா, பாரத விலாஸ், ரோஜா, பம்பாய், ஜெய்ஹிந்த், இந்தியில் கிஸ்மத், காந்தி (1948), கத்தர், 1942 எ லவ் ஸ்டோரி, சர்தார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - தி பர்கெட்டன் ஹீரோ, சர்பரோஷ், லெஜன்ட் ஆப் பகத் சிங் போன்றவை ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல.

மொழி, மாநில எல்லை, இன வேறுபாடு போன்றவற்றால், ஆயிரம் பேதங்கள் இருந்தாலும், இந்தியன் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் நீரு பூத்த நெருப்பாக அப்படியேதான் உள்ளது. அதை அவ்வப்போது விசிறிவிடும் அரிய பணியை இதுபோன்ற படங்கள் செய்து வருவது பாராட்டத்தக்கது. அதற்காகத்தான் வேறு எந்த தேசத்திலும் காணாத முக்கியத்துவத்தை சினிமாவுக்கு வழங்கி மகிழ்கிறார்கள் இந்தியர்கள்!

சுதந்திரத்தை போற்றுபோம்....



தங்கள் கருத்துக்காகவும் காத்திருக்கிறேன்...

12 August, 2011

அழகிரிக்கு ஆப்பு... 20 கோடி நிலமோசடி.. சிஎன்என்-ஐபிஎன் பரபரப்பு புகார்..



மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், பிற திமுக தலைவர்களும் பெருமளவில் நில அபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தினர் செய்த நில அபகரிப்புகள் தொடர்பாக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினிடமிருந்து ரூ. 20 கோடி மதிப்புடைய கோவில் நிலத்தை ரூ. 85 லட்சத்துக்கு தனது மனைவி காந்தி அழகிரி பெயரில் வாங்கியுள்ளார் அழகிரி. 2010ம் ஆண்டு இந்த நில விற்பனை நடந்துள்ளது.

மு.க.அழகிரி மத்திய அமைச்சரான பின்னர்தான் இந்த நிலத்தை பெற்றுள்ளனர். முறைகேடாக நடந்த இந்த நில விற்பனை தொடர்பாக அழகிரியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழகிரி தவிர திமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள், 3 மூத்த திமுக தலைவர்களும் தமிழகம் முழுவதும் பெருமளவில் நில அபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் வீரபாண்டி ஆறுமுகம் முக்கியமானவர். இவர் தவிர கே.என்.நேரு மற்றும் பரிதி இளம்வழுதி ஆகியோரும் நிலஅபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வும், மு.க.ஸ்டாலினின் வலது கரமுமான ஜே.அன்பழகனும் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் 24 குடும்பத்தினருக்குச் சொந்தமான அங்கம்மாள் காலனியில் வீரபாண்டி ஆறுமுகத்திடம் நிலத்தை இழந்தவர்களில் ஒருவரான உமா என்பவர் கூறுகையில், எங்களது சொந்த வீட்டை விட்டு அவர்கள் எங்களை விரட்டியடித்தனர். எங்களை தெருவில் அலைய விட்டனர். கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று குமுறினர்.

குணசீலன் என்பவர் கூறுகையில், அமைச்சருக்கு இதில் தொடர்பு இல்லை என்றால் பிறகு ஏன் கலெக்டர், தாசில்தார், ஆர்டிஓ, கமிஷனர் ஆகியோர் நாங்கள் புகார் கொடுத்தபோது உதவ முன்வரவில்லை. எல்லோருமே என் கண்மூடிப் போயிருந்தனர் என்றார்.

நில மோசடி வழக்குகளில் திமுக-வினர் அதிரடியாக அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இன்னும் மிச்சம் இருக்கும் பெரும்தலைகளையும் இச்சட்டம் விட்டுவைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

11 August, 2011

அவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்...!



எலிக்குப் பயந்து ஓடி புலியிடம் சிக்கிய கதையாகி விட்டது இந்தியர்களின் நிலைமை. வெள்ளையர்களிடமிருந்து கஷ்டப்பட்டு சுதந்திரம் அடைந்துவிட்டது நமது நாடு. ஆனால் இன்னும் ஊழல் கொள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.

1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவை அதிகம் ஆட்டிப் படைத்த 10 பயங்கரமான ஊழல்கள் குறித்த ஒரு பார்வை...

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

ஊழல்களுக்கெல்லாம் தாய் என்று போற்றுதலைப் பெற்றுள்ளது இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இந்த ஊழல் இதுவரை 2 மத்திய அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துள்ளது. நாட்டின் விவிஐபிக்களை சிறையில் தள்ளியுள்ளது.

 முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தனது பதவிக் காலத்தில் 2ஜி உரிமத்தை விதிமுறைகளை மீறி அடிமாட்டு விலைக்கு வழங்கினார், இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது சிஏஜி எனப்படும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம். அதன் பிறகு நடந்தேறிய சம்பங்கள் உலகம் அறிந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தால் பதவி விலகிய ஆ.ராசா, அவரது உதவியாளர் சண்டோலியா, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் பால்வா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் தற்போது திஹார் சிறையில் உள்ளனர்.

லேட்டஸ்டாக தயாநிதி மாறனின் பதவியையும் இந்த 2ஜி ஊழல் பறித்ததது.

2. போலி முத்திரைத்தாள் மோசடி
அப்துல் கரீம் தெல்கி என்பவர் நாசிக்கில் பணம் மற்றும் முத்திரைத்தாள் அடிக்கும் இடத்தில் உள்ள ஊழியர்களை கையில் வைத்துக் கொண்டு போலியாக முத்திரைத்தாள் தயாரித்து அதை அரசு நிறுவனங்களுக்கே விற்பனையும் செய்து நாட்டையே அதிர வைத்தார்.

சுமார் 12 மாநிலங்களில் ரூ. 43,000 கோடிக்கு முத்திரைத்தாள் விற்கப்பட்ட தகவல் வெளியாகி அனைவரையும் அயர வைத்தார் தெல்கி.

இந்த வழக்கில் தெல்கிக்கு ரூ. 100 கோடி அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

3. டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல்

2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு நிலவிய மெகா மற்றும் மகா குழப்பங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உலக அளவில் நம்மைப் பார்த்து பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு போட்டிக்கான ஏற்பாடுகளை முடிப்பதில் பெரும் காலதாமதம் செய்தனர்.

புத்தம் புதிதாக கட்டிய பாலம் உடைந்தது. சர்வேதச வீரர்களுக்காக கட்டிய குடியிருப்புகள் தங்கும் நிலையில் இல்லாமல் போனது. அறைகளுக்குள் பாம்பு வந்தது. உணவு சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இந்தியர்களை தலை குனிய வைத்து விட்டது.

பின்னர் நடந்த காமன்வெல்த் போட்டிகள் சிறப்பாக நடந்தேறின என்றாலும், சுரேஷ் கல்மாடியும், அவரது குழுவினரும் செய்த மிகப் பெரிய ஊழல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடந்தது.

காமன்வெல்த் ஜோதி ஓட்டம், விளையாட்டு சாதனங்கள் வாங்கியது, கட்டுமானப் பணி என பல்வேறு பணிகளில் பெருமளவில் பல நூறு கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்து நாடே அதிர்ந்தது. இதில் ரூ. 6,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு இதைவிட 10 பத்து மடங்கு அதிகம் என்கிறார்கள்.

இந்த போட்டிகளை நடத்தியதால் உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம்.

4. சத்யம் மோசடி

சத்யம் நிறுவன மோசடி தான் கார்ப்பரேட் உலகில் நடந்துள்ள மிகப் பெரிய மோசடியாகும். சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு ரூ. 14,000 கோடியை சுருட்டி விட்டு, அதை ஹாயாக ஒப்புக் கொள்ளவும் செய்தார்.

தனது நிறுவனத்தில் 40 ஆயிரம் ஊழியர்களை வைத்துக் கொண்டு 53 ஆயிரம் பேர் பணி புரிவதாக பொய்க் கணக்கு காண்பித்தார். நிறுவனத்தின் வருவாயையும் பொய்யாகவே காண்பித்து வந்தார்.

சத்யம் நிறுவனமும் இப்போது மகிந்திரா நிறுவனத்திடம் போய் விட்டது. டெக் மகிந்திராவாக புது அவதாரத்துடன் அது நடை போட்டு வருகிறது.

5. பெல்லாரி சுரங்க மோசடி

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் சுரங்கப் பணிகளுக்கு பெயர் போனது. தற்போது அது சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளது.

பெல்லாரியில் ரெட்டி சகோதரர்களால் நடத்தப்பட்ட சட்ட விரோதா சுரங்கத் தொழிலால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக லோக் ஆயுக்தா அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஊழலில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் சிக்கினார். அவரது குடும்பமே சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியது. அவர் தவிர குமாரசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த சட்டவிரோத தொழிலில் உள்ள தொடர்புகளை லோக் ஆயுக்தா புட்டுப் புட்டு
வைத்துள்ளது.

கர்நாடக அரசியலில் பெரும் புயலையும், பாஜகவில் பெரும் ஓட்டையையும் போட்டு விட்ட இந்த ஊழல் புகாரில் சிக்கிய எதியூரப்பா பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

6. மாட்டுத்தீவன ஊழல்

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ரூ. 900 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இதையடுத்து அவர் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார்.

7. ஆதர்ஷ் ஊழல்

மும்பையில் கார்கில் போரில் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்காக கட்டப்பட்ட குடியிருப்பு ஆதர்ஷ். 6 அடுக்கு மாடியாக கட்டத் திட்டமிட்டு இறுதியில் 31 மாடி கட்டிடமானது. இதில் விந்தை என்னவென்றால் இந்த குடியிருப்பில் 40 சதவீத வீடுகள் ராணுவ வீரர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டது தான்.

ஏற்கனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதுமில்லாமல், பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலத்தை ஆக்கிரமித்து அதில் கட்டிடத்தை எழுப்பியுள்ளனர். இந்த ஊழல் விவகாரத்தில் சிக்கி அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் அஷோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 95 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

8. போபர்ஸ் ஊழல்

இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கி வாங்கப்பட்டதில் ரூ.1,500 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் விவகாரத்தால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பதவி இழந்து, புதிய பிரதமராக வி.பி.சிங் பதவி ஏற்றார்.

இந்த விவகாரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட வின்சத்தாவும், இத்தாலிய தொழில் அதிபர் ஒட்டாவா குவாத்ரோச்சியும் ஏறத்தாழ ரூ.64 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. தொழில் அதிபர் குவாத்ரோச்சி ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர். இநத நிமிடம் வரை குவாத்ரோச்சியின் நிழலைக் கூட தொட முடியவில்லை சிபிஐயால். கடைசியில் குவாத்ரோச்சியை வழக்கிலிருந்தே விடுவிக்கும் நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டு விட்டது.

9. யூடிஐ மோசடி

யூடிஐ மோசடியில் முன்னாள் யூடிஐ சேர்மன் பி.எஸ். சுப்பிரமணியம் மற்றும் 2 செயற்குழு தலைவர்கள் எம்.எம். கபூர், எஸ்.கே. பாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

யூடிஐ கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து சிறிது காலத்திற்கு சைபர்ஸ்பேஸின் 40 ஆயிரம் பங்குகளை ரூ. 3.33 கோடி கொடுத்து ராகேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கியது. அந்த பங்குகளுக்கு கிராக்கி இல்லாத பொழுது வேண்டும் என்றே அதிக விலை கொடுத்து வாங்கியது. இதனால் பங்குகளின் விலை உயர்ந்தது.

அந்த 4 பேரின் சதியால் ரூ. 32 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று சிபிஐ தெரிவித்தது. சைபர்ஸ்பேஸ் பங்குள் விற்பனையை ஊக்குவிக்க அதிகாரிகளுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர்ஸ்பேஸ் இன்போசிஸ் விளம்பரதாரரான அரவிந்த் ஜோஹாரி கைது செய்யப்பட்டார். இந்த மோசடி செய்ததற்காக அவருக்கு நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.18 கோடி கிடைத்துள்ளது.

10. ஹர்ஷத் மேத்தா


இந்திய பங்குச்சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தா. அவர் கடந்த 1992-ம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் விலை திடீர் என்று உயரக் காரணமானவர். அவர் வங்கித் திட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பல வங்கிகளில் கடன் வாங்கி பல்வேறு பிரிவுகளின் பங்குகளை வாங்கிக் குவித்து அவற்றின் விலையேற்றத்தி்ற்கு காரணமானார்.

அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, முதலீட்டாளர்களைக் கவர்ந்தார். அவரது சதித் தி்ட்டம் கண்டுபிடிக்கப்பட்டபோது வங்கிகள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டன. இதனால் பங்குச் சந்தை நிலைகுலைந்தது. அவர் மீது 72 குற்றங்கள் சுமத்தப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. (நன்றி தட்ஸ்தமிழ்)

இந்நிலையில் மேத்தா கடந்த 2002-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். அவருக்கு எதிரான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

"முத்திரை ஊழல்"

இந்த பத்து ஊழல்களெல்லாம் நாட்டின் பல்வேறு சமுதாயத்தினர் செய்த ஊழல்கள். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு சம்பவம் நடந்ததை நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அது நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்குச் சாதகமாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு கோடி கோடியாக கொடுக்கப்பட்ட பணம்தான்.

2008ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது திடீரென பாஜக எம்.பி அசோக் அர்கால் உள்ளிட்ட மூன்று எம்.பிக்கள் பெரிய பெரிய பைகளில் பணத்தைக் கொண்டு வந்து சபாநாயகர் இருக்கை முன்பு கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தங்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியதைப் பார்த்து நாடே அதிர்ந்தது. பெருமை மிகுந்த லோக்சபாவில் கோடி கோடியாக பணத்தைக் கொட்டிய எம்.பிக்களால் நாடே அன்று வெட்கித் தலை குணிந்தது.

மற்ற ஊழல்களுக்கு சற்றும் குறையாதது இந்த எம்.பிக்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் என்பதில் சந்தேகமில்லை. 

படிப்பதற்க்கே தலைசுற்றுகிறதே இவ்வளவும் தெரிந்துக்கொண்டு நாம் சும்மாதான் இருக்கிறோம். ஒரு சில தரம் கெட்ட அரசியல்வாதிகலால் நம் இந்திய மானம் கப்பலேறுகிறது. இந்த ஊழல் ஒழிந்து நாடு என்று நல்ல நிலைக்கு நிறும்பும் என்ற ஏக்கத்தோடே கொண்டாட வேண்டியிருக்கிறது ஒல்வோறு சுதந்தரத்தையும்.....

ஜெய்ஹிந்த்...

10 August, 2011

வேடந்தாங்கல் கருனுக்கு ஒரு எச்சரிக்கை.... (எதிர் பதிவு)


இன்று இவர் வெளியிட்ட தொடர்பதிவு ஒன்று....
 தொ்டர்பதிவெழுதும் பதிவர்களை 
கிண்டர் செய்வது போன்று உள்ளது.


ஒரு பிரபல பதிவர் இப்படி செய்வது மிகவும் அபத்தமானது, மிகவும் கண்டிக்கத்தக்கது அப்படின்னு சொல்ல நான் வரல.....


ங்கொய்யால... என்ன நெனச்சிங்க எங்கல...
யார் தொடர் பதிவு ஆரம்பிச்சாலும் அதை நாங்கலும் தெடருவோம்ல....

நண்பர்களே இதில் யாராவது பெயரை நான் மறந்து விட்டிருந்தால் அவர்களாகவே எனக்கு நன்றி சொல்லிவிட்டு இந்த தொடர்பதிவு எழுத மிக தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி .. வணக்கம்.. சீக்கிரம்..சீக்கிரம் எல்லாரும் ஆரம்பிங்க..

அப்படின்னு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் இத் தொடர் பதிவை நான் தொடர்கிறேன்...


இதை தொடர நான் அழைப்பது...

1. பண்ணிகுட்டி ராமசாமி 
2. நிருபன் 
3. பாட்டுரசிகன்
4. தமிழ்வாசி பிரகாஷ் 
5. விக்கியுலகம் 
6. உணவு உலகம் 
7. சித்ரா அக்கா 
8. நம்ம லாப்டாப் மனோ 
9. செங்கோவி 
10. ராஜபாட்டை ராஜா 
11. ஆமினா 
12. நிகழ்வுகள் கந்தசாமி 
13. கோகுல் 
14. NAAI-NAKKS
15. Kss.Rajh
16. அம்பளடியாள்
17. கூடல் பாலா 
18. பரிவை . செ. குமார் 
19. சௌந்தர் 
20. செல்வா கதைகள் செல்வா 
21. மாய உலகம் 
22. யாழினி 
23. ஆர். கே . சதீஷ் குமார் 
24. துஷ்யந்தன் 
25. ஷர்புதின்
26. அரசன் 
27. காட்டான் 
28. சண்முகவேல் 
29. மகேந்திரன் 
30. ஐ,ரா . ரமேஷ் பாபு 
31. புலவர் ச. இராமாநுசம் ..
32. Reverie
33. மதராசபவன் சிவக்குமார் 
34. Nesan
35. கலாநேசன் 
36. இராஜராஜேஸ்வரி 
37. செய்தாலி
38. தமிழ் உதயம் 
39. கிராமத்து காக்கை 
40. M.R
41. பிரணவன் 
42. பாலா 
43. ரியாஸ் அஹமது 
44. சென்னை பித்தன் 
45. வெட்டிப்பேச்சு 
46. சங்கவி 
47.அன்பு 
48. ஹேமா 
49. எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங் 
50. ஷி - நிசி .
51. நண்பர் FARHAN 
52. மதிசுதா..
கடைசியா டெரர் கும்மி குருப்ஸ் ..



யாரும் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது...
ஒரு நகைச்சுவையோடு எடுத்துக்குங்க......
அப்படியே தங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்க...
கிரேட் எஸ்க்கேப்...


Related Posts Plugin for WordPress, Blogger...